முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

"நீங்கள் அழிந்து போவீர்கள்" தமிழக துணை முதல்வருக்கு சாபம் விட்ட ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண்.!

'You will perish' Andhra Deputy Chief Minister Pawan Kalyan cursed Tamil Nadu Deputy Chief Minister Udayanidhi.
09:04 PM Oct 03, 2024 IST | Kathir
Advertisement

கடந்த ஆண்டு, சென்னையில் நடந்த மாநாட்டில் தற்போது துணை முதல்வராக உள்ள உதயநிதி ஸ்டாலின், 'மலேரியா, டெங்கு நோய்கள் போல், சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும் ' என்று பேசினார். இந்த பேச்சு அப்போது பெரும் விவாத பொருளாக மாறியது. பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இதனை எதிர்த்து பல்வேறு மாநிலங்களில் அப்போதைய தமிழக அமைச்சராக இருந்த உதயநிதி மீது வழக்கும் தொடரப்பட்டது.

Advertisement

இந்நிலையில் நடிகரும் ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண் சனாதனம் குறித்த உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், "அண்டை மாநிலத்தை சேர்ந்த இளம் தலைவர் ஒருவர் வைரஸ் போன்ற சனாதன தர்மத்தை அழிக்க வேண்டும் என்றார்; அவருக்கு சொல்கிறேன், சனாதன தர்மத்தை யாரவது அழிக்க நினைத்தால், கடுவுள் பாலாஜியின் பாதத்தில் இருந்து சொல்கிறேன் "நீங்கள் அழிந்து போவீர்கள். சனாதன தர்மத்தை தாக்கி பேசுபவர்களை கண்டும் காணாமல் இருப்பது மதச்சார்பின்மை ஆகாது" என்று பேசியுள்ளார்.

Read More: உஷார்.. ஒரு பிரெஞ்ச் ஃப்ரைஸ் 25 சிகரெட் புகைப்பதற்கு சமம்..!! – நிபுணர்கள் எச்சரிக்கை..

Tags :
pawan kalyan about udhayanidhipawan kalyan vs udhayanidhiசனாதனபவன் கல்யாண்
Advertisement
Next Article