For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

நீங்களும் தொழில் முனைவோராக மாறலாம்..!! ரூ.3 லட்சம் வரை கடன் வழங்கும் மத்திய அரசு..!! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..

Artisans can get central government loan at 5% interest rate without any collateral.
07:35 AM Nov 07, 2024 IST | Chella
நீங்களும் தொழில் முனைவோராக மாறலாம்     ரூ 3 லட்சம் வரை கடன் வழங்கும் மத்திய அரசு     யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்
Advertisement

பெண்கள், இளைஞர்கள் ஸ்டார்ட் அப் நிறுவனங்களைத் தொடங்கி தொழில் முனைவோர்களாக மாற மத்திய அரசு கடனுதவி வழங்கி வருகிறது. அந்த வகையில், கைவினை கலைஞர்களுக்காக கொண்டுவரப்பட்ட "பிரதான் மந்திரி விஸ்வகர்மா யோஜனா" திட்டம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இத்திட்டத்தின் மூலம் கைவினைக் கலைஞர்கள் எந்த உத்தரவாதமும் இல்லாமல் 5% வட்டி விகிதத்தில் மத்திய அரசின் கடனுதவியைப் பெறலாம்.

Advertisement

இந்தத் திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் 5% வட்டியில் ரூ.1 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை கடனை பெறலாம். மத்திய அரசு முதற்கட்டமாக ரூ.1 லட்சம் வரை கடன் வழங்குகிறது. இந்தக் கடனை 18 மாதங்களுக்குள் சரியாக திருப்பிச் செலுத்திவிட்டால், மீதமுள்ள ரூ.2 லட்சம் கடன் பெறுவதற்கு நீங்கள் தகுதியானவர். மத்திய அரசின் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் தங்கள் தொழிலுக்கு தேவையான கருவிகளை வாங்கவும், 15,000 மதிப்பிலான வவுச்சரை பெறுகின்றனர்.

பயனாளிகள் தங்கள் பணி தொடர்பான உபகரணங்களை வாங்கிக் கொள்வதற்கு இந்த வவுச்சரைப் பயன்படுத்தி கருவிகளை வாங்கிக் கொள்ளலாம். விண்ணப்பித்த பயனாளிகளுக்கு தொழில் செய்ய பயிற்சி வழங்கப்படுகிறது. தச்சர், பொற்கொல்லர், கொல்லர், கொத்தனார், கல் சிற்பி, முடிதிருத்தும் தொழில் செய்பவர்கள், மீனவர்கள் உள்ளிட்டோர் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் மூலம் கடன் பெறலாம்.

விண்ணப்பிக்க தகுதி..?

பி.எம் விஸ்வகர்மா யோஜனா திட்டத்திற்கு விண்ணப்பிக்க ஒரு நபர் இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும். 18 வயதைப் பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். PMEGP, PM SVANidhi மற்றும் முத்ரா கடன் ஆகிய திட்டங்களின் மூலம் ஏற்கனவே கடன் பெற்றிருக்கக் கூடாது.

ஆவணங்கள்...

பிஎம் விஸ்வகர்மா யோஜனா திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ஆதார் கார்டு, பான் கார்டு, அடையாளச் சான்று, இருப்பிட சான்று, மொபைல் நம்பர், சாதி சான்றிதழ் போன்ற ஆவணங்களை வைத்திருக்க வேண்டும்.

விண்ணப்பிப்பது எப்படி..?

* முதலில் அதிகாரப்பூர்வ இணையதளமான https://pmvishwakarma.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.

* அதில், உங்கள் மொபைல் நம்பர் மற்றும் ஆதாரை பயன்படுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும்.

* பின்னர் OTP சரிபார்ப்பு மூலம் மொபைல் நம்பர் மற்றும் ஆதார் கார்டை சரிபார்க்கவும்.

* அதன் பிறகு பதிவு படிவத்தில் உங்கள் பெயர், முகவரி, வணிகம் போன்ற தேவையான விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.

* இப்போது, தேவையான ஆவணங்களை பதிவேற்றுங்கள். உங்கள் விவரங்கள் சரிபார்க்கப்பட்டதும் கடன் அங்கீகரிக்கப்பட்டு உங்கள் வங்கிக் கணக்கில் கடன் தொகை வரவு வைக்கப்படும்.

Read More : தமிழில் பேச, எழுத தெரிந்தால் போதும்..!! ரேஷன் கடைகளில் வேலை..!! விண்ணப்பிக்க இன்றே கடைசி..!!

Tags :
Advertisement