For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மது அருந்திய பின் இந்த உணவுகளை நீங்கள் தொடவே கூடாது..!! காத்திருக்கும் ஆபத்து..!!

02:05 PM May 11, 2024 IST | Chella
மது அருந்திய பின் இந்த உணவுகளை நீங்கள் தொடவே கூடாது     காத்திருக்கும் ஆபத்து
Advertisement

மது அருந்துபவர்கள், மதுவுடன் சில உணவுகளை எடுத்து கொள்கிறார்கள். அப்படி எடுத்துக் கொள்ளப்படும் சில உணவுகள் பல்வேறு உடல் ரீதியான பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக, நெஞ்செரிச்சல் மற்றும் வயிறு சார்ந்த பிரச்சனைகள் ஏற்படுவதற்கு இதுவும் ஒரு காரணமாக அமைகிறது. அதனால் மது அருந்தும்போது என்ன மாதிரியான உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

Advertisement

இறைச்சி மற்றும் முட்டை: மது அருந்தும்போது சிலர் அசைவ உணவுகளையும், முட்டையையுமே அதிகமாக சாப்பிடுகிறார்கள். ஆனால், இந்த வகையான உணவுகளைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும். மிக முக்கியமாக உடலில் வாயுத்தொல்லை, ஆசிட் ரிப்ளக்ஸ் பிரச்சனை இருப்பவர்கள் இவற்றைக் கட்டாயம் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் முட்டையில் இருக்கக்கூடிய அதிகப்படியான புரதத்தன்மை மது குடித்த பிறகு வயிற்றில் சேர்வது நல்லதல்ல. அவை உங்கள் வயிற்றினைத் தொந்தரவுக்கு உட்படுத்தும்.

பர்கர்: இயல்பாகவே பர்கர் என்பது அதிக கலோரிகளை கொண்டது. இது பசியை கட்டுப்படுத்தும். அதனால் மது அருந்துவதற்கு முன்பு பர்கர் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது. அதேபோல மது அருந்திய பிறகும் பர்கர் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அப்படி சாப்பிடும்போது வயிற்று வலி மற்றும் பெருங்குடல் சார்ந்த பாதிப்புகள் ஏற்படக்கூடும். ஏனென்றால், பர்க்கரில் இருக்கக்கூடிய அதிக புரோட்டீன் ஊட்டச்சத்து ஆனது உடலில் சரிவர பகிர்ந்து கொடுப்பதில் தடங்கல்கள் ஏற்படலாம்.

சாக்லேட்: சாக்லேட்டில் இருக்கக்கூடிய கொக்கோ மற்றும் காபின் ஆகியவை உடலில் வாயுத் தொல்லையை அதிகரிக்க செய்யும். மது குடித்த பிறகு உடலில் ஏற்கனவே ஆசிட் உற்பத்தி அதிகரித்திருக்க கூடிய சூழலில் இவற்றினை எடுத்துக் கொள்வது கூடுதலாக வயிற்றினை பாதிப்புக்கு உட்படுத்தும்.

பால் சார்ந்த பொருட்கள்: எந்த உணவைத் தவிர்க்கிறோமோ இல்லையோ மது குடித்த பிறகு பால் சார்ந்த பொருள்களைக் கட்டாயம் தொடக் கூடாது. இது செரிமான அமைப்பில் பிரச்சனையை ஏற்படுத்தும். வயிற்றில் ஆசிட் அதிகமாக உற்பத்தி ஆகுவதற்கு மது மற்றும் பால் பொருட்களை ஒரே நேரத்தில் எடுத்துக் கொள்வதே காரணம். மது குடித்த பிறகு மிக எளிதாக செரிமானம் ஆகக்கூடிய உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது.

வறுத்த உணவுகள்: எண்ணெயில் வறுக்கப்பட்ட உணவுகள் மது குடித்த பிறகு எடுத்துக்கொள்வது ஆபத்தானதாக முடியும். அவை உடலில் நீர்ச்சத்து இல்லாமல் ஆக்கிவிடக் கூடிய வாய்ப்புகள் அதிகம். எனவே, மது குடித்த மறுநாளும் கூட நீங்கள் தொந்தரவுக்கு உள்ளாவதற்கு இவை வாய்ப்பு அளிக்கின்றன.

உப்பு: உப்பு அதிகம் இருக்கும் உணவுகளை தவிர்க்க வேண்டும். அது உடலினை பாதிப்பதுடன் மறு நாள் வரையும் கூட சோர்வு, தூக்கமின்மை போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வழிவகுக்கின்றன.

அதிக காரம்: மது குடித்த பிறகு காரமான உணவுகளை உண்பதைத் தவிர்க்க வேண்டும். இது உங்கள் வயிற்றினை தொந்தரவுக்கு உட்படுத்தும். செரிமான அமைப்பினை பாதிப்பதாக மாறிவிடும். எனவே, தலைவலி போன்ற பிரச்சனைகள் ஏற்படுவது, தூக்கமின்மை, மன அழுத்தம் ஆகியவை ஏற்படுவதற்கு இவை மிக முக்கியமான காரணமாக அமைகின்றன.

ஆரஞ்சு: ஆரஞ்சு பழத்தில் ஏற்கனவே இருக்கக்கூடிய சிட்ரஸ் ஆசிட் என்பது உங்கள் வயிற்றின் செரிமான பிரச்சனை பாதிப்புக்கு உட்படுத்தும். ஏற்கனவே மது குடித்து இருப்பதன் விளைவாக உருவாகக்கூடிய ஆசிட் பிரச்சனையை இது அதிகரிக்கும்.

Read More : PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்..!! இதை செய்தால் ரூ.7 லட்சம் கிடைக்கும்..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

Advertisement