For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

”அப்படியெல்லாம் பண்ண முடியாது”..!! ஸ்ட்ரிக்டாக சொன்ன ஐகோர்ட்..!! அதிர்ச்சியில் ஆடிப்போன சீமான்..!!

The Madras High Court has stated that a petition can be filed in the Vikravandi Court seeking the withdrawal of the arrest warrant against Seeman and that he cannot be exempted from appearing in person.
01:36 PM Jan 22, 2025 IST | Chella
”அப்படியெல்லாம் பண்ண முடியாது”     ஸ்ட்ரிக்டாக சொன்ன ஐகோர்ட்     அதிர்ச்சியில் ஆடிப்போன சீமான்
Advertisement

சீமானுக்கு எதிரான பிடிவாரண்டை திரும்பப் பெற கோரி விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யலாம் என்றும் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Advertisement

கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலின் போது, நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து சீமான் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை இன துரோகி.. தேச துரோகி என குறிப்பிட்டு பேசியதாக கூறப்படுகிறது. எனவே, வன்முறையை தூண்டும் விதமாக பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கஞ்சனூர் காவல் நிலையத்தில் மாவட்ட காங்கிரஸ் தலைவர் புகாரளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், இதுதொடர்பான வழக்கு விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியிருந்தார் சீமான். இந்த மனு விசாரணைக்கு வந்த நிலையில், சீமானின் பேச்சு வன்முறையை தூண்டியது என்பதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை என சீமான் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். மேலும், இந்த வழக்கில் சீமான் விசாரணைக்கு ஆஜராகாததால், அவர் மீது பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கில் இருந்து சீமான் ஆஜராக விலக்களிக்க வேண்டும் என்றும் வாதிட்டார்.

இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, ”சீமானுக்கு எதிரான பிடிவாரண்டை திரும்பப் பெற கோரி விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யலாம் என்றும் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க முடியாது என்றும் கூறினார். மேலும், சீமானின் மனுவுக்கு பதிலளிக்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டு, இந்த வழக்கின் விசாரணையை பிப்ரவரி 6ஆம் தேதி ஒத்திவைத்தார்.

Read More : ”நான் பேசியது தப்பு தான்”..!! ”இனி திருந்தி வாழப்போறேன்”..!! வைரலாகும் சவுக்கு சங்கரின் ஆடியோ பதிவு..!!

Tags :
Advertisement