For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

உன் அப்பன் யாரு தெரியுமா..? நேத்து முளைச்சவன் எல்லாம் பேசுறான்..!! நீ யார்ரா முதல்ல..? விஜய்யை கடுமையாக தாக்கி பேசிய ஆர்.எஸ்.பாரதி

Before you were born, only men served in the police in Tamil Nadu. The first person to provide employment to women in the police force was artist Karunanidhi.
01:25 PM Jan 22, 2025 IST | Chella
உன் அப்பன் யாரு தெரியுமா    நேத்து முளைச்சவன் எல்லாம் பேசுறான்     நீ யார்ரா முதல்ல    விஜய்யை கடுமையாக தாக்கி பேசிய ஆர் எஸ் பாரதி
Advertisement

பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிராக போராடி வரும் மக்களை தவெக தலைவர் விஜய் நேரடியாக சந்தித்து ஆதரவு தெரிவித்திருந்தார். அப்போது, திமுகவை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். இந்நிலையில், விஜய்யின் பேச்சு குறித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசுகையில், “நேற்று முளைத்தவன் எல்லாம் பேசுகிறான். அவங்க அப்பனையே நாங்க தான் அறிமுகம் செய்து வைத்தோம். அவன் இப்போது நமக்கு சவால் விடுகிறான். திமுகவை எதிர்த்தவன் எவனும் வாழ்ந்தது கிடையாது.

Advertisement

பேசுவதற்கு ஒரு யோகிதை வேண்டும். நாடகமாடுவதில் நாங்கள் எல்லாம் கைதேந்தவர்கலாம். அப்படினா நீ யார்ரா? உன் அப்பன் யாரு? உன் அம்மா யாரு? என கேட்டால் பதில் சொல்ல முடியுமா? உங்க அப்பா யாரு தெரியுமா..? எங்க தலைவர் எழுதிய வசனத்தை டைரக்‌ஷன் பண்ண ஆளு. இதையெல்லாம் மக்கள் மறந்து விடுவார்கள் என்று பேசுகிறார்கள். இதெல்லாம், அவர்களுக்கு தெரியாது.

நீ பிறப்பதற்கு முன்பு தமிழ்நாட்டில் ஆண்கள் மட்டும்தான் காவல்துறையில் பணியாற்றுவார்கள். முதன் முதலில் காவல்துறையில் பெண்களுக்கு பணியை ஏற்படுத்திக் கொடுத்தவர் கலைஞர் கருணாநிதி. அதன் விளைவு 1976இல் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. கலைஞருடைய மகன் மு.க.ஸ்டாலின், முரசொலி மாறன் இருவரையும் கைது செய்தார்கள். சித்திரவதை செய்தார்கள். சுற்றி இருப்பவர்களை எல்லாம் துன்புறுத்தினார்கள். ஆனால், அதையும் தாங்கிக் கொண்டு தைரியமாக கட்சியை தூக்கிப் பிடித்தவர் கலைஞர்” என்று பேசினார்.

Read More : ”நான் பேசியது தப்பு தான்”..!! ”இனி திருந்தி வாழப்போறேன்”..!! வைரலாகும் சவுக்கு சங்கரின் ஆடியோ பதிவு..!!

Tags :
Advertisement