For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

”ஆதார் கார்டில் இனி அவ்வளவு ஈசியா பெயர், பிறந்த தேதியை மாற்றிவிட முடியாது”..!! அமலுக்கு வந்த கடுமையான விதிகள்..!!

If a person is going to change his name in Aadhaar, he will only be given 2 chances.
07:22 AM Nov 25, 2024 IST | Chella
”ஆதார் கார்டில் இனி அவ்வளவு ஈசியா பெயர்  பிறந்த தேதியை மாற்றிவிட முடியாது”     அமலுக்கு வந்த கடுமையான விதிகள்
Advertisement

ஒவ்வொரு இந்தியருக்கும் ஆதார் அட்டை என்பது மிக முக்கியமான ஆவணமாக பார்க்கப்படுகிறது. வங்கிக் கணக்கு, பான் கார்டு, சிம் கார்டு, அரசின் நலத்திட்டங்கள் உள்ளிட்டவைகளுக்கு ஆதார் எண் அவசியம் தேவைப்படுகிறது. அட்டைதாரரின் பெயர், பிறந்த தேதி, மொபைல் நம்பர், புகைப்படம் என அனைத்து விவரங்களும் ஆதார் அட்டையில் அடங்கியுள்ளன. இந்நிலையில், ஆதாரின் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் சில விதிகளை திருத்தியுள்ளது.

Advertisement

இப்போது நீங்கள் பெயரில் ஏதேனும் மாற்றம் செய்ய விரும்பினால், கெஸ்டட் நோட்டிபிகேசன் தேவைப்படும். ஆதாரில் பெயர் மாற்றம் செய்வதற்கான விதிகள் முன்பை விட தற்போது கடுமையாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆதாரில் உங்கள் முழுப் பெயர் அல்லது சில எழுத்துக்களை மாற்ற விரும்புகிறீர்கள் என்றால், கேஜெட் அறிவிப்புடன், விண்ணப்பதாரர் தனது பழைய பெயர் எழுதப்பட்ட பழைய அடையாளச் சான்றினை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயனர் பெயரை மாற்றப் போகிறார் என்றால் அவருக்கு 2 வாய்ப்புகள் மட்டுமே வழங்கப்படும். அதே நேரத்தில், உங்கள் முகவரியைப் புதுப்பிக்கவோ அல்லது புதிதாகப் பதிவு செய்யவோ விரும்பினால், இப்போது இதற்கான செயல்முறை எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக, எந்த பொதுத்துறை பேங்கின் பாஸ்புக்கையும் வழங்கலாம். ஆனால், இதற்கு விண்ணப்பதாரர்கள் பேங்க் ப்ரஞ்ச் மேலாளரிடம் இருந்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். பேங்கின் பதிவேடுகளில் முகவரி பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் e-KYC செயல்முறை முடிந்துவிட்டது என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும்.

இதற்கிடையே, தற்போது பிறந்த தேதியில் திருத்தம் செய்வதற்கான தகுதிகளும் கடுமையாகிவிட்டன. 18 வயதிற்குட்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு, அங்கீகரிக்கப்பட்ட மாநில அதிகாரிகளால் வழங்கப்பட்ட பிறப்புச் சான்றிதழ் மட்டுமே சான்றாக ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பாஸ்போர்ட் மற்றும் SSLC புத்தகம் செல்லாது. எனவே, நீங்களும் உங்கள் ஆதாரில் ஏதேனும் மாற்றங்களை செய்யவிருந்தால், இந்த புதிய விதிகளை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்.

Read More : பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு மருத்துவமனை!. இஸ்ரேல் அதிரடி!

Tags :
Advertisement