For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தேங்காய் துருவ கஷ்டமா இருக்கா?? இட்லி பாத்திரத்தில் இப்படி வைத்துப் பாருங்கள்..

easy-ways-to-take-coconut-out-of-the-shell
07:20 AM Nov 25, 2024 IST | Saranya
தேங்காய் துருவ கஷ்டமா இருக்கா   இட்லி பாத்திரத்தில் இப்படி வைத்துப் பாருங்கள்
Advertisement

பொதுவாக தேங்காயை துருவ அதிக நேரம் ஆகும். அதுவும் புதிதாக சமைக்க பழகுபவர்களுக்கு தேங்காய் துருவுவது மிகப்பெரிய சவால். அவசரமான காலை வேளைகளில் தேங்காய் துருவினால் அதிக நேரம் வீணாகி விடும். இதனால் நாம் மொத்தமாக தேங்காயை துருவி வைத்து விட்டால், ஒரு சில நாட்களில் தேங்காய் கேட்டு விடும். இதனால் நமக்கு என்ன செய்வது என்றே தெரியாது. இனி நீங்கள் கவலை பட வேண்டாம். சமையலில் அதிகம் பயன்படுத்தும் தேங்காயை எப்படி எளிதாக துருவி, அதை கெட்டுப்போகாமல் பாதுகாக்க முடியும் என்பதை பற்றி பார்ப்போம்.

Advertisement

இதற்க்கு முதலில், தேங்காயை சுமார் 30 விநாடிகள் தண்ணீரில் ஊற வைத்து விடுங்கள். உங்களுக்கு ஒருவேளை நேரம் குறைவாக இருந்தால், பைப்பை திறந்து விட்டு தேங்காயை முழுவதுமாக கழுவி விடுங்கள். பின்னர், தேங்காய் கண் இருக்கும் பகுதிக்கு அருகில் உள்ள கோட்டின் மீது அடியுங்கள். இதனால் தேங்காய் சுலபமாக உடைந்து விடும். பின்னர், உடைத்த தேங்காயை இட்லி பாத்திரத்தில் வைத்து சுமார் 10 நிமிடங்கள் வேக வையுங்கள். இப்போது வேக வைத்த தேங்காயை மெல்லிய கத்தி கொண்டு பிரித்தால், ஓட்டில் இருந்து தேங்காய் தனியாக வந்து விடும்.

இப்போது, பிரித்து எடுத்த தேங்காயை சிறிய துண்டுகளாக வெட்டி, மிக்ஸியில் அரைத்து எடுக்க வேண்டும். அரைக்கும் போது, தண்ணீர் துளியும் சேர்க்க கூடாது. இப்போது அரைத்து எடுத்த தேங்காயை காற்று புகாத பாத்திரத்தில் போட்டு, கைகள் படாமல் ஸ்பூனில் எடுத்து பயன்படுத்தினால், 1 வாரத்திற்கு தேங்காய் கெட்டுப் போகாது. இதை நீங்கள் பிரிட்ஜில் வைத்தும் பயன்படுத்தலாம். பிரிட்ஜில் வைத்தால் 1 வாரத்திற்கு மேலும் கேட்டுப் போகாது.

Read more: ஐஸ்வர்யாவிற்கு இருந்த தொடர்பு; தனுஷ் குடும்பத்தை மதிக்காத லதா ரஜினிகாந்த்.. பரபரப்பை கிளப்பியுள்ள பத்திரிகையாளர்..

Tags :
Advertisement