For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பிரியாணிக்கு பயன்படுத்தப்படும் பொருட்களை வைத்து உடல் எடையை சுலபமாக குறைக்கலாம்..!! இதோ அந்த டிப்ஸ்..!!

05:10 AM Apr 17, 2024 IST | Chella
பிரியாணிக்கு பயன்படுத்தப்படும் பொருட்களை வைத்து உடல் எடையை சுலபமாக குறைக்கலாம்     இதோ அந்த டிப்ஸ்
Advertisement

உடல் பருமனால் பலரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். ஆரோக்கியமற்ற உணவுகளை உண்பது, அதிகப்படியான மன அழுத்தம், உடலில் நோய் இருத்தல் போன்ற காரணங்களால் உடல் எடை அதிகரிக்கிறது. உடல் எடையை கட்டுக்குள் வைக்கவில்லை என்றால், முதுமை காலத்தில் பல்வேறு நோய் பாதிப்புக்கு ஆளாக நேரிடும்.

Advertisement

ஆனால், சிலர் உடல் எடையை குறைக்க உடற்பயிற்சி, நடைபயிற்சி, உணவு கட்டுப்பாட்டில் கவனம் செலுத்துவர். அதையும் ஒரு சில நாட்கள் மட்டுமே கடைபிடிப்பார்கள். ஆனால், உடல் எடையை குறைக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்திய குறிப்பை பின்பற்றினால் சில தினங்களில் நல்ல பலன் கிடைக்கும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

தேவைப்படும் பொருட்கள் :

1)பட்டை

2)பிரியாணி இலை

3)தேன்

4)ஏலக்காய்

5)இஞ்சி

6)தேன்

7)தண்ணீர்

செய்முறை :

* அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 1 1/2 கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கிக் கொள்ளவும். பிறகு அதில் ஒரு பிரியாணி இலை, ஒரு துண்டு பட்டை சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும்.

* பின்னர் ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கி உரலில் போட்டு இடித்து கொதிக்கும் தண்ணீரில் சேர்க்க வேண்டும்.

* அதேபோல் ஒரு ஏலக்காயை இடித்து அதில் சேர்த்து 2 நிமிடங்களுக்கு கொதிக்க விட்டு அடுப்பை அணைத்துவிடவும்.

* இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி சிறிது தேன் கலந்து குடித்து வந்தால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து உடல் கட்டுக்கோப்பாக மாறும்.

Read More : Lok Sabha | ’இனி யாரும் ஓட்டு போட முடியாது’..!! தபால் வாக்கு நிறைவு..!! நாளை ஓய்கிறது பிரச்சாரம்..!!

Advertisement