RTO ஆபீஸ் போகாமல் லைசென்ஸ் வாங்க முடியும்!! எப்படி தெரியுமா?
டிரைவிங் லைசன்ஸ் வாங்காத நபராக இருந்தால் இந்த செய்தி உங்களுக்கானது. நீங்கள் ஆர்டிஓ அலுவலகத்திற்கு செல்லாமல் ஓட்டுநர் உரிமத்தைப் பெறலாம். ஆனால் அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சி மையங்களில் இருந்து அதைப் பெற முடியும். மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் அறிவித்துள்ள புதிய விதிகளின்படி, அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சி மையங்களில் பயிற்சியை சரியாக முடித்த பின்னர் உங்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும். மத்திய அல்லது மாநில போக்குவரத்து துறைகள் இத்தகைய பயிற்சி மையங்களை இயக்கும்.
ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் இந்த ஓட்டுநர் பயிற்சி மையங்களில் ஏதேனும் ஒன்றில் பயிற்சிக்காக பதிவு செய்து, அவர்கள் நடத்தும் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தேர்வில் தேர்ச்சி பெற்றவுடன், பயிற்சி மையம் சான்றிதழ் வழங்கும். சான்றிதழைப் பெற்ற பிறகு, விண்ணப்பதாரர்கள் ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிக்கலாம். ஆர்டிஓவில் எந்த சோதனையும் இல்லாமல் பயிற்சி சான்றிதழின் அடிப்படையில் ஓட்டுநர் உரிமம் உங்களிடம் வழங்கப்படும்.
Read more ; 1 ரூபாய் கொடுத்தால் 500 ரூபாயை அள்ளிக் கொடுக்கும் நாடு!! எங்கே தெரியுமா?