முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ரூ.300 தள்ளுபடியில் சிலிண்டர் வாங்கலாம்!… எப்படி தெரியுமா?… வாய்ப்பை தவறவிடாதீர்கள்!

08:37 AM Nov 23, 2023 IST | 1newsnationuser3
Advertisement

இந்தியாவில் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் மறுபுறம் பெட்ரோல், டீசலுக்கு போட்டியாக கேஸ் சிலிண்டர் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இருப்பினும், கடந்த சில மாதங்களில் சமையல் சிலிண்டர் விலை கணிசமாகக் குறைந்துள்ளது என்பது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறைந்த விலைக்கு சிலிண்டர்களை வாங்குவதன் மூலம் பணத்தை மிச்சப்படுத்துவதற்கான வழி உள்ளது. அதன் மூலம் நீங்கள் 300 ரூபாய் தள்ளுபடியில் சிலிண்டர் வாங்கலாம்.

Advertisement

குறைந்த விலைக்கு சிலிண்டர் வாங்குவது எப்படி சாத்தியம் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அது உண்மைதான். சிலிண்டர்களின் விலை நகரத்திற்கு நகரம் மாறுபடும். எல்பிஜி சிலிண்டர் விலை ரூ. 940 வரை இருக்கிறது. ஆனால் நீங்கள் 300 ரூபாய் குறைவாக சிலிண்டர் வாங்க முடியும். தற்போது, ​​எல்பிஜி சிலிண்டர் விலை குறைந்து வருவதால் மக்கள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன் சிலிண்டர் விலை ரூ. 200 குறைக்கப்பட்டது. இதுதவிர தனி மானியமாக 100 ரூபாய் வழங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.அதன்படி தற்போது ரூ.300 மானியம் வழங்கும் பணி நடந்து வருகிறது. உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் சிலிண்டர்களுக்கு இந்த மானியம் வழங்கப்படுகிறது.

300 ரூபாய் மானியம் போக நீங்கள் வெறும் 640 ரூபாய்க்கு சிலிண்டர் வாங்கலாம். எனவே, இந்த வாய்ப்பை நீங்கள் தவறவிடாமல் குறைந்த விலைக்கு சிலிண்டர் வாங்கிப் பயன்படுத்தலாம். விரைவில் தேர்தல் வரவிருப்பதால் மானியத் தொகை மேலும் உயர்த்தப்படவும் வாய்ப்பு உள்ளது.

Tags :
உஜ்வாலா யோஜனா திட்டம்சிலிண்டர் வாங்கலாம்ரூ.300 தள்ளுபடிரூ.300 மானியம்ரூ.640க்கு சிலிண்டர்
Advertisement
Next Article