For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

இப்படியும் உங்கள் முகத்தை அழகுபடுத்தலாம்..!! இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க..!!

05:05 AM Apr 28, 2024 IST | Chella
இப்படியும் உங்கள் முகத்தை அழகுபடுத்தலாம்     இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க
Advertisement

பெண்கள் அனைவரும் முகத்தை பளபளப்பாகவும், பொலிவாகவும் வைத்துக்கொள்ள நினைப்பார்கள். ஆனால், முக அழகை கெடுக்கும் விதமாக பருக்கள், கரும்புள்ளிகள் போன்றவை உண்டாகின்றன. அந்தவகையில், வீட்டிலிருந்தபடியே சரும பிரச்சனைகள் நீங்கி, முகம் பளபளக்க இந்த சார்கோல் Facepack போதும்.

Advertisement

1 தேவையான பொருட்கள்:

சார்க்கோல்- 1 ஸ்பூன்
முல்தானி மிட்டி- 1 ஸ்பூன்
ரோஸ் வாட்டர்- 2 ஸ்பூன்

தயாரிக்கும் முறை:

ஒரு பவுலில் சார்க்கோல், முல்தானி மெட்டி மற்றும் ரோஸ் வாட்டர் போன்றவற்றைக் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். சருமம் ஏற்கனவே வறண்டிருந்தால் இந்த பேஸ்பேக்கில் சிறிது தேன் கலந்து கொள்ளலாம்.

2 தேவையான பொருட்கள்

சார்க்கோல்- 1 ஸ்பூன்
கற்றாழை ஜெல்- 1 ஸ்பூன்
அரிசி மாவு- 1 ஸ்பூன்

தயாரிக்கும் முறை

* ஒரு பவுலில் சார்க்கோல், கற்றாழை ஜெல் மற்றும் அரிசி மாவு ஆகியவற்றை கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து தேய்த்து சுத்தம் செய்ய வேண்டும். முகத்தில் கரும்புள்ளிகள் பிரச்சனை இருந்தால் முகத்தில் பேஸ்பேக் பயன்படுத்துவதன் மூலம் அது நீங்கும்.

3 தேவையான பொருட்கள்

சார்க்கோல்- 1 ஸ்பூன்
சோள மாவு- 1 ஸ்பூன்
தேங்காய் தண்ணீர்- 1 ஸ்பூன்

தயாரிக்கும் முறை

* ஒரு பவுலில் சார்க்கோல், கார்ன்ஃப்ளார் மற்றும் தேங்காய் நீரை சேர்ந்து கலந்து முகத்தில் தடவி 20 நிமிடங்களுக்குப் பிறகு முகத்தைத் தண்ணீரில் கழுவலாம். உங்கள் சருமம் வறண்டு இருந்தால் சிறிது தேன் கலந்து கொள்ளவும்.

Read More : மாதம் ரூ.63,000 சம்பளத்தில் தபால்துறையில் வேலை..!! உடனே அப்ளை பண்ணுங்க..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

Advertisement