முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

எங்கும் அலைய வேண்டாம்...! குரூப்-4 தேர்வுக்கு ஆன்லைன் மூலம் நீங்களே விண்ணப்பிக்கலாம்...! எப்படி தெரியுமா...?

06:00 AM Feb 05, 2024 IST | 1newsnationuser2
Advertisement

குரூப்-4 தேர்வுக்கு எப்படி விண்ணப்பிப்பது என்பதை பார்க்கலாம்.

வி.ஏ.ஒ., இளநிலை உதவியாளர் உட்பட 6,244 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு அறிவிப்பை கடந்த வாரம் வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம். தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க பிப்.28ம் தேதி கடைசி நாள் ஆகும். தேர்வுக்கு tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஜூன் 9-ம் தேதி காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை தேர்வு நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

Advertisement

குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஜூனியர் அசிஸ்டெண்ட் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 12 -ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்பு படித்தவர்களுக்கும் குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் ஜூலை 1, 2024 அன்று குறைந்தபட்ச வயது 18 ஆக இருக்க வேண்டும். அதே சமயம், அதிகபட்ச வயது வரம்பு 32 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

எப்படி விண்ணப்பிப்பது...?

ஆர்வம் உள்ளவர்கள் tnpscexams.in என்ற TNPSC-யின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். முதலில் இணையதளத்திற்கு சென்று Login செய்யவும். பின்னர் TNPSC குரூப் 4 விண்ணப்பப் படிவம் 2024-ஐ பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை பதிவு செய்ய வேண்டும். இதை அடுத்து விண்ணப்ப கட்டணம் செலுத்தி விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

ஒரு முறை பதிவு கட்டணம் ரூ. 150 செலுத்த வேண்டும். ஏற்கனவே பதிவு செய்துள்ள விண்ணப்பதாரர்கள் மீண்டும் பதிவு செய்யத் தேவையில்லை. இது போக, குரூப் 4 தேர்வுக்கு ரூ.100 தேர்வு கட்டணமாக செலுத்த வேண்டும். இறுதியாக TNPSC குரூப் 4 விண்ணப்பத்தை நீங்கள் பிரிண்ட் எடுத்து வைக்க வேண்டும். குறிப்பாக குரூப் 4 தேர்வுக்கான வினாத்தாள்கள் தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் இருக்கும். உங்களுக்கு விருப்பமான மொழியில் நீங்கள் எழுதுவதற்கான ஆப்ஷனை விண்ணப்பிக்கும்போது தேர்வு செய்ய வேண்டும்.

Tags :
group 4group examHow to apply tnpsconline applyTNPSCTnpsc apply
Advertisement
Next Article