முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

RTE : இன்று முதல் விண்ணப்பிக்கலாம்..! அரசு ஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் சேர்க்கை..! கடைசி நாள் மீ 20..!

07:41 AM Apr 22, 2024 IST | Baskar
Advertisement

தங்கள் பிள்ளைகளை அரசு ஒதுக்கீட்டில் தனியார் பள்ளியில் சேர்க்க விரும்பும் பெற்றோர் இன்று(ஏப்ரல் 22) முதல் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

Advertisement

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் 2009-ன் கீழ், வாய்ப்பு மறுக்கப்பட்ட, பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை வழங்கப்பட்டு வருகிறது. இந்த இடங்களில் சேரும் மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித் துறையே கட்டணத்தை ஏற்கிறது. இந்த நிலையில் மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி 2024-25-ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு இன்று (ஏப்.22) முதல் rte.tnschools.gov.in என்ற இணையதளம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பிக்க கடைசி நாள் மே 20ஆம் தேதி என்றும், விண்ணப்பப் பதிவு வெற்றிகரமாக முடிந்ததும், பதிவேற்றம் செய்யப்பட்ட விவரம், பதிவு செய்யப்பட்ட பெற்றோரின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பள்ளியிலும் நிர்ணயிக்கப்பட்ட இடங்களைவிட அதிக விண்ணப்பங்கள் வந்தால், அந்த பள்ளிகளில் குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கும் குறைவாக உள்ள குழந்தைகள், வாய்ப்பு மறுக்கப்பட்ட குழந்தைகள் உரிய சான்றுகளுடன் விண்ணப்பிக்கலாம். எல்கேஜி வகுப்பில் சேர்வதற்கு குழந்தைகள் 2020 ஆகஸ்ட் 1 ம் தேதி முதல், 2021 ஜூலை 31ம் தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும். முதல் வகுப்பில் சேர உள்ள குழந்தைகள் 2018 ஆகஸ்ட் 1ம் தேதி முதல், 2019 ஜூலை 31ம் தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும்.

பெற்றோர்கள் தங்களின் வீடுகளில் இருந்து 1 கிலோ மீட்டருக்கு உட்பட்டு அமைந்திருக்கக் கூடிய தனியார் பள்ளிகளுக்கு 25 சதவீதம் இட ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கலாம். தகுதியான விண்ணப்பம் ஏற்கப்பட்ட விபரத்தையும், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்காக விபரத்தையும் மே 27ம் தேதி இணையதளத்தில் வெளியிட வேண்டும்.

தனியார் பள்ளிகளில் ஒதுக்கப்பட்ட 25 சதவீத ஒதுக்கீட்டிற்கு அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டிருப்பின் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்க வேண்டும். மே 28ம் தேதி குலுக்கல் நடத்தி குழந்தைகள் தெரிவு செய்யப்படுவார்கள். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் அரசால் ரூ.400 கோடி தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Read More: EPS | “எடப்பாடி பழனிச்சாமி கை காட்டும் நபர்தான் அடுத்த பிரதமர்”… முன்னாள் அமைச்சர் பரபரப்பு பேட்டி.!!

Tags :
rte admission 2024
Advertisement
Next Article