இதுக்கு ஒரு எண்டே இல்லையா? 6-வது நாளாக உயர்ந்த தங்கம் விலை.. இன்று எவ்வளவு தெரியுமா?
சென்னையில் இன்றைய தினம் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.58,400க்கு விற்பனையாகிறது.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. தீபாவளியன்று ரூ.59,640 என்ற வரலாறு காணாத உச்சத்தை அடைந்த தங்கத்தின் விலை பின்னர் இறக்கமாக இருந்தது. அதன்படி கடந்த 17ஆம் தேதி ஒரு கிராம் ரூ.6,935-க்கும், ஒரு சவரன் ரூ.55,480-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
ஆனால் கடந்த 5 நாட்களாக தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த 5 நாட்களில் ஒரு சவரனுக்கு ரூ.2,320 வரை உயர்ந்தது. நேற்றைய தினம் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.7,225க்கும், ஒரு சவரன் ரூ.57,800-க்கு விற்பனையானது. இந்நிலையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமிற்கு ரூ.75 உயர்ந்து, ரூ.7,300க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் ஒரு சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.58,400-க்கு விற்பனையாகிறது.
வெள்ளியின் விலையை பொறுத்தவரை மாற்றமின்றி, ஒரு கிராம் வெள்ளி ரூ.101-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 6 நாட்களில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.2,920 வரை உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்களும் பொதுமக்களும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.