உங்கள் குழந்தையின் பெயரை நீங்களே ரேஷன் கார்டில் சேர்க்கலாம்..!! எப்படின்னு தெரியுமா..?
ரேஷன் கார்டில் உங்கள் குழந்தைகளின் பெயரை சேர்ப்பது மிகவும் எளிது. நீங்களே உங்கள் வீட்டில் இருந்து எளிதாக குழந்தைகளின் பெயரை சேர்க்க முடியும். அது எப்படி என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
* குழந்தைகளின் பெயரை ரேஷன் கார்டில் இணைக்க, முதலில் tnpds இன் இணையதளத்திற்கு ( https://www.tnpds.gov.in/) செல்ல வேண்டும். அதில், வலதுபுறத்தின் கீழ் மின்னணு அட்டை தொடர்பான சேவைகள் என்று இருக்கும்.
* அதில் உறுப்பினரை சேர்க்க, முகவரி மாற்ற, குடும்ப தலைவர் மாற்றம் செய்ய, குடும்ப உறுப்பினர் நீக்க, அட்டை தொடர்பான சேவை நிலை அறிய என 5 ஆப்ஷன்கள் இருக்கும். அதில் உறுப்பினரை சேர்க்க என்ற ஆப்சனை கிளிக் செய்ய வேண்டும்.
* பிறகு, ரேஷன் கார்டு உடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணை பதிவிட வேண்டும். பின்னர், உங்கள் செல்போனுக்கு ஒரு ஒடிபி வரும். அதனை 300 வினாடிக்குள் பதிவு செய்ய வேண்டும்.
* பின்னர் தோன்றும் திரையில் உங்கள் ரேஷன் கார்டில் பதிவு செய்யப்பட்டுள்ள மொத்த குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள் இருக்கும். உங்கள் குடும்பத்தின் தலைவர் மற்றும் அனைவரது விவரங்களும் இடம் பெற்றிருக்கும். கடைசியாக குடும்ப உறுப்பினரை சேர்க்க அவர்களின் விவரங்களை கேட்கும். அதற்கு ஆதார் அல்லது பிறப்பு சான்றிதழ் இதில் ஏதாவது ஒன்றை இணைக்க வேண்டும்.
* பிறந்த குழந்தைகளுக்கு ஆதார் எண் கட்டாயமில்லை. அதேநேரம் பிறந்த சான்றிதழை அதில் இணைத்த பிறகு உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டு விட்டது என்று தோன்றும். பின்னர் 20 நாட்கள் கழித்து குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கையில் உங்கள் குழந்தையின் பெயரும் இணைக்கப்பட்டிருக்கும். (அதிகபட்சம் 30 நாட்கள்)
* நீங்கள் குடும்ப அட்டையின் நிலையை தெரிந்து கொள்ள குறிப்பு எண் கொடுத்திருப்பார்கள். அதை வைத்து நீங்கள் என்ன நிலையில் இருக்கிறது என்பதை அறிய முடியும்.
* வெற்றிகரமாக குடும்ப அட்டையில் உங்கள் குழந்தையின் பெயர் சேர்க்கை முடிந்த பின்னர், மறுபதிப்பு என்ற ஆப்சனை தேர்வு செய்து 20 ரூபாய் செலுத்தி, புதிய குடும்ப அட்டை வாங்கி கொள்ளலாம். புதிய நகல் அட்டை வாங்க தாசில்தார் அலுவலகத்திற்கு செல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
Read More : பள்ளி மாணவியை தரதரவென இழுத்துச் சென்று கூட்டு பலாத்காரம் செய்த கொடூரம்..!! அடித்து துவைத்த பொதுமக்கள்..!!