”நீங்க எங்களுக்கு பாடம் எடுக்காதீங்க”..!! ”இந்த விஷயத்துல முதல்ல கவனம் செலுத்துங்க”..!! அமைச்சருக்கு பதிலடி கொடுத்த எடப்பாடி பழனிசாமி
கடன் அளவு பற்றி எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியாவிலேயே கடன் வாங்கும் மாநிலங்களில் திமுக அரசு முதலிடம் பிடித்துள்ளது. அளவுக்கு அதிகமான கடன்களை வாங்கியுள்ளது. இதுகுறித்து நான் தமிழ்நாடு சட்டப்பேரவையிலும், பொதுவெளியிலும் சுட்டிக் காட்டி பேசியுள்ளேன். ஆனால், எனக்கு பொருளாதார நிதி மேலாண்மை குறித்து அடிப்படை புரிதல் இல்லை என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
நிதிப் பற்றாக்குறையை கட்டுப்படுத்தி, வருவாய் பற்றாக்குறை அறவே நீங்குதல் - கடன் வாங்கும் அளவை கட்டுப்படுத்தி, வாங்கும் கடனை மூலதன செலவுக்கு பயன்படுத்த வேண்டும். இதுதான் சிறந்த நிதி நிர்வாகத்திற்கான அடையாளம். இதை நாங்கள் ஆட்சியில் இருக்கும்போதே கூறியுள்ளோம். அப்போது உண்மையிலேயே நாங்கள் வாங்கிய கடனின் அளவு 25 சதவீதத்திற்குள்தான் இருந்தது. ஆனால், திமுக ஆட்சியில் கடனின் அளவு 26%-ஐ தாண்டியுள்ளது.
இதை நாங்கள் சொன்னால் எங்களுக்கு அடிப்படை புரிதல் இல்லை என்று சொல்வீர்களா..? வருவாய்ப் பற்றாக்குறை எங்கள் ஆட்சியில் இருந்ததைவிட தற்போது அதிகமாகி உள்ளது. இதற்கு அமைச்சர் விளக்கம் கொடுத்திருக்க வேண்டும். இதுதான் நிதி மேலாண்மையா? இதை சுட்டிக் காட்டினால் நிதி அமைச்சர் எனக்கு பாடம் எடுக்கிறார்.
மக்களின் கவனத்தை திசை திருப்பும் அறிக்கை வெளியிடுவதை விடுத்து, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான திட்டங்களை தீட்டி அதனை செயல்படுத்த அமைச்சர் கவனம் செலுத்த வேண்டும். மேலும், எங்களுக்கு நிதி மேலாண்மை பற்றி பாடம் எடுக்க வேண்டாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Read More : ”இத்தனை நாள் பரந்தூரை மறந்துவிட்டாரா”..? ”இப்போது மட்டும் என்ன”..? விஜய்யை கடுமையாக தாக்கி பேசிய தமிழிசை..!!