For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Paris Paralympics 2024 | ஆண்களுக்கான வட்டு எறிதலில் வெள்ளி வென்றார் இந்திய வீரர் யோகேஷ் கதுனியா..!!

Yogesh Kathuniya claims Silver in Men's Discus Throw F-56 at Paris Paralympics 2024
03:36 PM Sep 02, 2024 IST | Mari Thangam
paris paralympics 2024   ஆண்களுக்கான வட்டு எறிதலில் வெள்ளி வென்றார் இந்திய வீரர் யோகேஷ் கதுனியா
Advertisement

செப்டம்பர் 2, திங்கட்கிழமை பாரிஸ் பாராலிம்பிக்ஸில் ஆடவருக்கான வட்டு எறிதல் F-56 போட்டியில் யோகேஷ் கதுனியா வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

Advertisement

பாராலிம்பிக்கில் யோகேஷ்க்கு இது இரண்டாவது வெள்ளிப் பதக்கம். அவர் 2021 இல் டோக்கியோ பாராலிம்பிக்ஸில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றார். 27 வயதான இந்தியர் பிரேசிலின் கிளாடினி பாடிஸ்டா டோஸ் சாண்டோஸிடம் இருந்து கடுமையான போட்டியை எதிர்கொண்டார்.

பிரேசில் வீரர் Claudiney Batista dos Santos தங்கம் பதக்கம் வென்றார். தனது முதல் முயற்சியிலேயே Claudiney Batista dos Santos 48.86 மீட்டர் தூரத்திற்கு வட்டு எறிந்து தங்கப் பதக்கத்தை உறுதி செய்தார். இது அவருக்கு ஹாட்ரிக் தங்கப் பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. கிரீஸ் வீரர் Konstantinos Tzounis 41.32 மீட்டர் தூரம் வட்டு எறிந்து வெண்கலப் பதக்கம் வென்றார். போதிய தசை வளர்ச்சி குறைவின் காரணமாக அவதிப்பட்டு வரும் யோகேஷ் கதுனியா உலக அரங்கில் இந்தியாவுக்காக பதக்கம் வென்று சாதனை படைத்து உள்ளார்.

யோகேஷ் கதுனியாவின் வெள்ளிப் பதக்கத்துடன் சேர்த்து பாராலிம்பிக்ஸ் விளையாட்டு தொடரில் இந்தியாவின் மொத்த பதக்க எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது. பாராலிம்பிக்ஸ் பதக்க பட்டியலில் இந்தியா 1 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 8 பதக்கங்களுடன் 30வது இடத்தில் உள்ளது.

Read more ; நைட் தூங்கும் போது கதவ தட்டி அழைப்பாங்க.. அந்த தமிழ் நடிகர் ஜன்னல் வழியே.. ச்சீ!! – நடிகை ஷகீளா பகீர்

Tags :
Advertisement