For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

நாளொன்றுக்கு ரூ.6 கோடி மோசடி..!! 17,000 வாட்ஸ் அப் கணக்குகள் அதிரடி முடக்கம்..!! உள்துறை அமைச்சகம் உத்தரவு..!!

The Union Home Ministry has taken action by blocking 17,000 WhatsApp accounts as part of its measures against cybercrime.
07:57 AM Nov 22, 2024 IST | Chella
நாளொன்றுக்கு ரூ 6 கோடி மோசடி     17 000 வாட்ஸ் அப் கணக்குகள் அதிரடி முடக்கம்     உள்துறை அமைச்சகம் உத்தரவு
Advertisement

சைபர் குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக 17,000 வாட்ஸ் அப் கணக்குகளை மத்திய உள்துறை அமைச்சகம் முடக்கி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி என்ற புதிய வகையிலான சைபர் குற்றங்களை தவிர்க்க பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 17,000 வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இந்த கணக்குகள் அனைத்துமே, ஆன்லைன் நிதி மோசடிக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

Advertisement

பாதிக்கப்பட்ட நபர்கள், மத்திய உள்துறை அமைச்சகத்தின் சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்திடம் புகார் அளித்துள்ளனர். புகாரை பரிசீலிக்கப்பட்ட பிறகு, வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. சிபிஐ, வருமான வரி மற்றும் சுங்க வரி அதிகாரிகளாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி, கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க அதிக மதிப்பிலான தொகையை செலுத்த வேண்டும் எனக்கூறி பணம் பறிக்கின்றனர். இந்தாண்டில் மட்டும் நாளொன்றுக்கு 6 கோடி ரூபாய் என்ற கணக்கில் அக்டோபர் மாதம் வரை 2,140 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. முடக்கப்பட்ட வாட்ஸ் அப் கணக்குகள் கம்போடியா, மியான்மர், லாவோஸ், தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து இந்த வாட்ஸ் அப் கணக்குகள் செயல்படுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Read More : செம அறிவிப்பு..!! 450 + காலிப்பணியிடங்கள்..!! விண்ணப்பிக்க 30ஆம் தேதியே கடைசி..!! லட்சத்தில் சம்பளம்..?

Tags :
Advertisement