ரயில் பெட்டிகளில் மஞ்சள் மற்றும் பச்சை நிறக் கோடுகள் ஏன் வரையபடுகிறது.? அதற்கான காரணம் என்ன தெரியுமா.?
இந்திய ரயில்வே போக்குவரத்து ஆசியாவிலேயே மிகப்பெரிய ரயில்வே நெட்வொர்க்கை கொண்டது. மேலும் உலக அளவில் இரண்டாவது மிகப்பெரிய ரயில்வே நெட்வொர்க்காகவும் இருந்து வருகிறது. 1853 ஆம் வருடம் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் மும்பை மற்றும் தானே ஆகிய இடங்களுக்கு இடையே இந்தியாவின் முதல் ரயில்வே போக்குவரத்து துவங்கப்பட்டது.
சுதந்திரத்திற்கு பிறகு 1951 ஆம் ஆண்டு இந்திய ரயில்வேத்துறை தேசியமயமாக்கப்பட்டது. 33 கிலோமீட்டர் களைக்கிடையே முதன் முதலாக தொடங்கப்பட்ட இந்திய ரயில் போக்குவரத்து இன்று நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர் இருப்புப் பாதைகளை அமைத்து உலகின் மிகப்பெரிய ரயில்வே நெட்வொர்க்கில் ஒன்றாக செயல்பட்டு வருகிறது.
பொதுமக்கள் அனைவருமே ரயில்வே பயணத்தை விரும்புவோர்களாகவே இருக்கின்றனர். இதற்குப் பயண இலக்கை அடைய எடுத்துக் கொள்ளும் நேரம் மற்றும் பட்ஜெட் ஆகியவை முக்கிய காரணங்களாகும். நாம் ரயிலில் பலமுறை பயணித்திருந்தாலும் ஒரு சில விஷயங்களை கவனிக்க மறந்திருப்போம். அது போன்ற ஒரு விஷயம் தான் ரயிலின் ஜன்னல்களில் வரையப்பட்டிருக்கும் வண்ணக் கோடுகள். ஒருவேளை அந்தக் கோடுகளை நாம் கவனித்திருந்தாலும் அவற்றிற்கான காரணம் என்ன என்று நமக்கு தெரியாமல் இருக்கலாம். அவை என்ன என்று பார்ப்போம்.
அதிவிரைவு வண்டிகளில் ஜன்னலின் மேலே வெள்ளை நிறக் கோடுகள் வரைந்திருந்தால் அதற்கு முன்பதிவில்லாத ரயில் பெட்டிகள் என்று அர்த்தம். ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்யாமல் ஸ்டேஷனில் வந்து டிக்கெட் எடுத்து செல்பவர்கள் பயணிப்பதற்கான பெட்டி என்று அர்த்தமாகும். மேலும் ரயில்வே ஜன்னலின் மீது மஞ்சை கலர் கோடுகள் இருந்தால் மாற்றுத்திறனாளிகள் மற்றும் உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் பயணம் செய்யக்கூடிய பெட்டிகள் என்று அர்த்தம். இதே ஜன்னல்களில் பச்சை மற்றும் கிரே நிறத்தில் கோடுகள் இருந்தால் அது மகளிர் மட்டும் பயணம் செய்வதற்கான சிறப்பு பெட்டிகள் என்று அர்த்தம் ஆகும். பயணிகள் எளிதாக அடையாளம் கண்டு கொள்வதற்கு ரயில்வே துறை இது போன்ற ஏற்பாடுகளை செய்திருக்கிறது.