ஆடைகளில் உள்ள X- L - S குறியீடு? பலரும் அறியாத விடயம்!
வீட்டில் எவ்வளவு ஆடைகள் இருந்தாலும், புதிய ஆடைகள் வாங்குவதில் பெரும்பாலன மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் தெருவுக்கு தெரு துணிக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. புத்தாடைகள் அணிவதில் உள்ள மகிழ்ச்சி எல்லையில்லாதது.
நாம் ஆடைகள் வாங்கும் போது நமது அளவு என்ன என்பது குறித்த கேள்வியும் கட்டடாயம் எழும். அவ்வாறு அளவுகளை தெரிவு செய்யும் போது ஆடைகளில் XL, XXL என்று எல்லாம் வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றது. அதில் L, S என்ற எழுத்துக்கு லார்ஜ், ஸ்மால் என்பதே அர்த்தம். இது பலருக்கும் தெரிந்த விடயமாகும். ஆனால் X என்பதற்கு என்ன அர்த்தம் என்று சிந்தித்திருக்கின்றீர்களா?
ஆடைகளின் அளவுகளில் குறிப்பிடப்படும் ‘எக்ஸ்’ என்பது எக்ஸ்ட்ரா என்பதன் சுருக்கமாகவே குறிப்பிடப்படுகின்றது. அதேபோல், XL என்றால் எக்ஸ்ட்ரா லார்ஜ் என்றும், XXL என்றால் எக்ஸ்ட்ரா எக்ஸ்ட்ரா லார்ஜ் என்பதையுமே சுருக்கமான முறையில் குறிப்பிடுகின்றது.
பொதுவாக XL அளவுள்ள சட்டை அளவு 42 இன்ச் முதல் 44 இன்ச் வரை காணப்படுகின்றது. இதேபோல், XXL சட்டைகள் அல்லது ஆடைகள் விஷயத்தில், அளவு பொதுவாக 44 அங்குலங்கள் முதல் 46 அங்குலங்கள் வரை காணப்படுகிdன்றது. இதே போன்று S என்றால் ஸ்மால், XS என்றால் எக்ஸ்ட்ரா ஸ்மால், M என்றால் மீடியம் என்பதையும் சுருக்கமாக குறிக்கின்றது. ஆண்கள், பெண்கள் இருபாலாருக்குமான ஆடைகளில் உலகளாவிய ரீதியில் இந்த குயியீடு தான் பயன்படுத்தப்படுகின்றது.