இந்தியாவில் 1.8 லட்சம் கணக்குகளை தடை செய்த X.!! வெளியான பரபரப்பு அறிக்கை.!!
எலோன் மஸ்கிற்கு சொந்தமான X சமூக வலைதளம் மார்ச் 26 ஆம் தேதி முதல் ஏப்ரல் 25ஆம் தேதி வரை குழந்தைகளின் பாலியல் சுரண்டல் மற்றும் அனுமதி இல்லாமல் எடுக்கப்பட்ட நிர்வாண படங்களை பதிவேற்றிய 1,84,241 எக்ஸ் அக்கவுண்டுகளை இந்தியாவில் முடக்கி இருப்பதாக அறிவித்திருக்கிறது.
மேலும் மைக்ரோ பிளாகிங் தனமான X தீவிரவாதத்தை ஊக்குவிப்பதாக 1,303 கணக்குகளையும் முடக்கியிருக்கிறது. மொத்தத்தில் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட காலகட்டத்தில் 185,544 கணக்குகளை பிளாக் செய்ததாக X தளம் தெரிவித்துள்ளது. புதிய தொழில்நுட்ப விதிகள் 2021 ன் படி இந்தியாவில் உள்ள பயனர்களிடமிருந்து ஒரே நேரத்தில் பெறப்பட்ட 18,562 புகார்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் 118 புகார்களை பரிசீலித்து அவற்றை சஸ்பெண்ட் செய்துள்ளதாகவும் அறிவித்துள்ளது. இந்த புகார்களை மதிப்பாய்வு செய்து 4 கணக்குகளின் சஸ்பெண்டை ரத்து செய்ததாகவும் தெரிவித்துள்ளது. மீதமுள்ள அக்கவுண்டுகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாகவும் அண்ட நிறுவனம் தெரிவித்துள்ளது
இந்த அறிக்கை வெளியிடும் காலகட்டத்தில் X அக்கவுண்ட் தொடர்பான கேள்விகளைக் கொண்ட 105 கோரிக்கைகளை பெற்றதாகவும் எக்ஸ் தளம் தெரிவித்துள்ளது.
இந்தியாவிலிருந்து பெறப்பட்ட புகார்களில் தடை ஏய்ப்பு தொடர்பாக 7,555 புகார்களும் வெறுக்கத்தக்க வகையில் பதிவுகள் செய்தது தொடர்பாக 3,353 புகார்களும் பாலியல் துஷ்பிரயோகத்தை கொண்ட கண்டன்டுகள் தொடர்பாக 3,335 புகார்களும் துஷ்பிரயோகம்/துன்புறுத்தல் தொடர்பாக 2,402 புகார்களும் பெறப்பட்டதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.