'X' பயனர்களுக்கு சூப்பரான அப்டேட் .! இனி ஆடியோ & வீடியோ கால் இலவசம்.!
வாட்ஸ்அப், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்கள் தங்களது பயனர்களுக்கு ஆடியோ மற்றும் வீடியோ கால்கள் செய்யும் வசதியை அறிமுகப்படுத்தியது. தற்போது இந்த வசதி 'X' சமூக வலைதளத்திலும் அறிமுகப்படுத்தப்பட்டது. எனினும் இந்த வசதியை பிரிமியம் சந்தாகாரர்கள் மட்டுமே பயன்படுத்தும் வகையில் இருந்தது. ஆனால் தற்போது அனைவரும் இந்த வசதியை பயன்படுத்தலாம் என 'X' நிறுவனம் அறிவித்துள்ளது.
எலோன் மஸ்க்கிற்கு சொந்தமான சமூக தளமான X (முன்பு ட்விட்டர்) ஆடியோ மற்றும் வீடியோ அழைப்பு வசதியை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது. இந்த அம்சம் பயனர்கள் வாட்ஸ்அப் மற்றும் பேஸ் டைம் போன்ற மற்ற X பயனர்களிடமிருந்து ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகளைப் பேசுவதற்கு பயன்படுகிறது. ஆரம்பத்தில் இந்த வசதி கட்டண சந்தாதாரர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. தற்போது இதனை அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும் படி செய்திருக்கிறது.
இந்த தகவலை X பொறியாளர் என்ரிக் பர்ரகன் தனது சமூக வலைதள பதிவின் மூலம் அனைவருக்கும் அறிவித்திருக்கிறார். இது தொடர்பாக பதிவு செய்திருக்கும் அவர்இது நிறுவனத்தின் சிஇஓ Linda Yaccarino என்பவரால் பகிரப்பட்டது எனவும் குறிப்பிட்டு இருக்கிறார். அந்தப் பதிவில் X சமூக வலைதளம் வீடியோ மற்றும் ஆடியோ கால் அழைப்புகளை பிரீமியம் இல்லாத பயனர்களுக்கு தாமதமாக வெளியிடுகிறோம். இதனை இப்போது முயற்சி செய்து பாருங்கள். நீங்கள் அனைவரிடமும் அழைப்புகளை அனுமதிப்பதை தேர்வு செய்யலாம் என குறிப்பிட்டு இருக்கிறார்
இந்த அழைப்புகளை ஏற்கும் வசதியை மேலும் விரிவு படுத்துவதன் மூலம் 'X' வலைதள பயனர்கள் அனைவரும் வீடியோ மற்றும் ஆடியோ அழைப்புகளை மேற்கொள்ளலாம். முன்பு பிரிமியம் பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்ட இந்த வசதி தற்போது X தளத்தின் அனைத்து பயனர்களுக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. இது வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ் டைம் செயலிகளில் உள்ளதை போலவே செயல்படுகிறது. இது 'iOS CallKit API' உடன் இணைந்து செயல்படுகிறது. உங்கள் ஸ்கிரீன் லாக் செய்யப்பட்டிருந்தாலும் சாதாரண அழைப்புகளை போலவே இதன் அழைப்புகளையும் பார்க்கலாம். இந்த அழைப்பு வசதி X வலைதளத்தின் டைரக்ட் மெசேஜ் பகுதியில் இடம்பெற்றிருக்கும்.
மேலும் x வலைத்தளம் தனது பயனர்களுக்கு அழைப்புகள் மீதான முழு கட்டுப்பாட்டை வழங்குகிறது. பயனர்கள் தங்களது காண்டாக்ட்டில் இருக்கும் நபர்களுக்கு அழைப்புகளை மேற்கொள்ளலாம். அல்லது அவர்கள் தரும் அழைப்புகளுக்கு பதில் அளிக்கலாம். மேலும் பயனர்கள் தங்களது அழைப்புகளை மேற்கொள்வதற்கும் அழைப்புகளை பெறுவதற்கும் குறிப்பிட்ட நபர்களை தேர்வு செய்யும் வசதியையும் கொடுத்திருக்கிறது. மேலும் பயனர்கள் தங்களுக்கு இந்த வசதி தேவை இல்லை என்று நினைத்தால் ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகளை நிரந்தரமாக ரத்து செய்வதற்கான வசதியையும் X தளம் வழங்கி இருக்கிறது.
இதனிடையே எலோன் மஸ்க் தனது X இயங்குதளம் விரைவில் ஜிமெயில் சேவைக்கு மாற்றாக X மெயிலை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக X வலைதளத்தின் இன்ஜினியரிங் மற்றும் செக்யூரிட்டி பிரிவு உறுப்பினரான நெட் மெக்கார்டி என்பவரின் கேள்விக்கு பதில் அளித்த எலான் மஸ்க் X மெயில் விரைவில் வரும் என பதிலளித்துள்ளார்