For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

WPL 2024 Final: கோப்பையை வெல்லப்போவது யார்?… டெல்லி - பெங்களூரு அணிகள் இன்று மோதல்!

05:58 AM Mar 17, 2024 IST | 1newsnationuser3
wpl 2024 final  கோப்பையை வெல்லப்போவது யார் … டெல்லி   பெங்களூரு அணிகள் இன்று மோதல்
Advertisement

WPL: பெண்கள் பிரீமியர் லீக் கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.

Advertisement

2-வது பெண்கள் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 23-ந் தேதி தொடங்கியது. 5 அணிகள் இடையிலான இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா 2 முறை மோதின. லீக் சுற்று முடிவில் முதலிடத்தை பிடித்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. உ.பி.வாரியர்ஸ் (6 புள்ளி) 4-வது இடமும், குஜராத் ஜெயன்ட்ஸ் (4 புள்ளி) கடைசி இடமும் பிடித்து வெளியேறின.

லீக் முடிவில் 3-வது இடத்தை பெற்ற பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி வெளியேற்றுதல் சுற்றில் 2-வது இடம் பெற்ற நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸை விரட்டி அடித்து முதல்முறையாக இறுதிப்போட்டியை எட்டியது. இந்த நிலையில் கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் நடக்கிறது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

மெக் லானிங் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி லீக் சுற்றில் 8 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 2 தோல்வியுடன் 12 புள்ளிகள் குவித்து முதலிடம் பிடித்து தொடர்ச்சியாக 2-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தது. டெல்லி அணி மும்பை, உ.பி.வாரியர்சுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் மட்டும் தோல்வி கண்டது. மற்றபடி இந்த சீசனில் எல்லா ஆட்டங்களிலும் செலுத்தி அசத்தியது.

ஐ.பி.எல். போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் கடந்த 16 ஆண்டுகளில் ஒருமுறை கூட கோப்பையை வென்றது கிடையாது. ஆனால் பெண்கள் ஐ.பி.எல். எனப்படும் இந்த பிரீமியர் லீக் போட்டியில் 2-வது ஆண்டிலேயே கோப்பை ஏக்கத்தை போக்க இரு அணிகளுக்கும் வாய்ப்பு கிட்டிருக்கிறது. கோப்பையை வசப்படுத்த இரு அணிகளும் வரிந்து கட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்த போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.6 கோடி பரிசாக வழங்கப்படும். 2-வது இடம் பெறும் அணிக்கு ரூ.3 கோடி பரிசாக கிடைக்கும்.

Readmore: தேர்தல் எதிரொலி!… “வெளிநாடுகளில் “IPL போட்டிகள்”?… பிசிசிஐ முக்கிய அறிவிப்பு!

Tags :
Advertisement