For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

PM Modi | "இன்னும் மோடியை மக்கள் நம்புகிறார்களா.?" தேர்தல் வாக்குறுதி குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சனம்.!!

03:42 PM May 12, 2024 IST | Mohisha
pm modi    இன்னும் மோடியை மக்கள் நம்புகிறார்களா    தேர்தல் வாக்குறுதி குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சனம்
Advertisement

PM Modi: 2024 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தல் பரபரப்பான நிலையை எட்டி இருக்கிறது. மூன்று கட்ட வாக்குப்பதிவுகள் முடிவடைந்து நிலையில் நான்காம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் இடைக்கால ஜாமினில் நேற்று விடுதலை செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து வருகின்ற ஜூன் ஒன்றாம் தேதி டெல்லியில் நடைபெறும் வாக்கு வாக்குப்பதிவிற்காக ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் தேர்தல் பேரணிகள் பங்கு பெற்றார்.

Advertisement

இந்நிலையில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமர் மோடி(PM Modi) கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது குறித்து கேள்வி எழுப்பி இருக்கிறார். கடந்த 10 ஆண்டுகளில் மூடி கொடுத்த வாக்குறுதிகளில் எத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறார்.?என பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் கேள்வி எழுப்பினார். பிரதமர் மோடி கடந்த தேர்தல்களில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார்.

ஸ்மார்ட் நகரங்களில் 24 மணி நேர மின்சாரம் புல்லட் ரயில் ஆகிய திட்டங்கள் கடந்த காலங்களில் தேசிய ஜனநாயக கூட்டணியால் வாக்குறுதிகளாக கொடுக்கப்பட்டது. இந்தத் திட்டங்கள் கைவிடப்பட்டிருக்கிறது அல்லது முழுவதுமாக முடி உடையாமல் பாதியிலேயே நிறுத்தப்பட்டிருப்பதாக கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். ஆனால் ஆம் ஆத்மி கட்சி மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் கொடுத்த வாக்குறுதிகள் முறையாக நிறைவேற்றப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டினார்.

அரசுப் பள்ளிகள் பொது மக்களுக்கான முகல்லா மருத்துவமனைகள் மற்றும் இலவச மின்சாரம் ஆகிய திட்டங்கள் ஏமாத்மி கட்சியால் நிறைவேற்றப்பட்டிருப்பதாக கூறினார். 2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தலிலும் ஆமா கட்சியின் சார்பாக பத்து வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவற்றையும் நிச்சயமாக நிறைவேற்றுவோம் என உறுதி அளித்திருக்கிறார்.

நாடு முழுவதும் கிராமப்புறங்களிலும் 24 மணி நேர தடையில்லாமல் மின்சாரம் குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் நல்ல கல்வி இளைஞர்களுக்கு ஒவ்வொரு வருடமும் இரண்டு கோடி வேலை வாய்ப்புகள் சீனா ஆக்கிரமிப்பில் உள்ள இந்திய பகுதிகளை மீட்பது அக்னி வீர திட்டத்தை ரத்து செய்வது போன்ற திட்டங்கள் ஆம் ஆத்மி கட்சியால் தேர்தல் வாக்குறுதிகளாக அறிவிக்கப்பட்டிருக்கிறது .

இந்த வாக்குறுதிகள் குறித்து இந்தியா கூட்டணியுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு அதிகாரப்பூர்வமாக பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் அறிவிக்கப்படும் எனவும் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார். மேலும் ஆம் ஆத்மி கட்சி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியது போல் இந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றும் எனவும் அவர் கூறினார். மோடி கடந்த 10 வருடங்களாக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத நிலையில் இன்னும் மக்கள் அவரை நம்புகிறார்களா.? என கேள்வியும் எழுப்பி இருக்கிறார்.

Read More: “CAA சட்டத்தை அமல்படுத்துவதை யாராலும் தடுக்க முடியாது..” மேற்கு வங்காளத்தில் மோடி வாக்குறுதி.!!

Advertisement