முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

இனி கவலை இல்லை!… மாற்றுத்திறனாளிகளுக்காக WhatsApp-ல் வருகிறது புது அப்டேட்!

06:29 AM Mar 22, 2024 IST | 1newsnationuser3
Advertisement

WhatsApp: காது கேளா மாற்றுத்திறனாளி பயனர்களுக்காக அசத்தாலன அப்டேட் ஒன்றை வாட்ஸ் அப் விரைவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

Advertisement

குறுந்தகவல்களை பகிர்ந்து கொள்ள உதவும் WhatsApp செயலி அனைவருக்கும் மிகவும் உபயோகமாக இருக்கிறது. இந்த செயலி Meta குழுமத்திற்கு கீழ் வந்த பிறகு, அதனை மேலும் மேலும் மேம்படுத்தும் வகையில் பல்வேறு Updates வழங்கப்பட்டு வருகின்றன. உலகம் முழுவதும் WhatsApp பயனாளர்களின் எண்ணிக்கை 5 பில்லியனை கடந்து சென்று வருகிறது. ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள மிகவும் எளிய முறையில் இந்த செயலி இருப்பதால், பயனாளர்கள் மத்தியில் WhatsApp செயலிக்கு பெரும் வரவேற்பு இருந்து வருகிறது.

Meta நிறுவனம் WhatsApp அவ்வப்போது புது புது அம்சங்களை கொண்டுவந்து பயனர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்தவகையில், பிரபல தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ்அப் மற்றொரு புதிய வசதியை கொண்டு வரவுள்ளது. வாட்ஸ்அப் குரல் குறிப்பு டிரான்ஸ்கிரிப்ஷன் என்ற புதிய அம்சத்தை வெளியிடுகிறது. இதன் மூலம், குரல் செய்திகளை உரைகளாக மாற்ற முடியும்.

இதன் விளைவாக, குறிப்பைக் கேட்காமல், செய்தியைப் படித்து மீண்டும் பதிலளிக்க முடியும். அதாவது, குரல் செய்தியை புரிந்து கொள்ள முடியாதவர்கள் மற்று காது கேளாதவர்களுக்கு குரல் குறிப்புகளை உரையாக மாற்றி தருவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. WhatsApp ஏற்கனவே சில iOS பயனர்களுக்குக் கிடைக்கச் செய்துள்ளது. ஆண்ட்ராய்டு பயனர்களும் விரைவில் பெறுவார்கள் என வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Readmore: Online Game: ஆன்லைன் பந்தயம், சூதாட்ட தளம்… சமூக ஊடக நிர்வாகத்தினருக்கு மத்திய அரசு எச்சரிக்கை…!

Tags :
WhatsApp-ல் வருகிறது புது அப்டேட்இனி கவலை இல்லைமாற்றுத்திறனாளிகள்
Advertisement
Next Article