உலகின் மிக நீளமான ஜீன்ஸ்!. பட்டன் மட்டுமே 3600 கிலோ!. பைசா கோபுரத்தை விட பெரியது!. கின்னஸ் உலக சாதனை!
Guinness World Record: சீனாவில் தயாரிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய ஜீன்ஸ் பைசா கோபுரத்தை விட பெரியது என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். கின்னஸ் உலக சாதனை படைத்து சீன ஆடை தயாரிப்பு நிறுவனம் அசத்தியுள்ளது.
சீன ஆடை தயாரிப்பு நிறுவனம் ஒன்று, 30 ஊழியர்களை கொண்டு 18 நாட்களுக்கு ஒரு ஜோடி ஜீன்ஸ் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டது. இந்த முயற்சியின் வெற்றியாக, 76.34 மீட்டர் நீளம் கொண்ட ஜீன்ஸ் தயாரிக்கப்பட்டது. இந்த ஜீன்ஸின் இடுப்பு சுற்றளவு 58.164 மீட்டர் ஆகும். முக்கியமாக, இந்த ஜீன்ஸ் பைசா கோபுரத்தை விட பெரியது என்று கூறப்படுகிறது. அதாவது, பைசா கோபுரத்தின் நீளம் 55 மீட்டர் ஆகும். இந்த 76.34 மீட்டர் நீளமுள்ள ஜீன்ஸ் கடந்த செப்டம்பர் 28ம் தேதி சீனாவின் குவாங்சி நகரில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.
சீனாவுக்கு முன், உலகின் மிக நீளமான ஜீன்ஸ் என்ற சாதனையை பாரிஸ் நிறுவனம் படைத்திருந்தது. இந்த ஜீன்ஸின் நீளம் 65.60 மீட்டர் ஆகும். அதாவது இந்த ஜீன்ஸை விட சீனாவில் தயாரிக்கப்பட்ட ஜீன்ஸ் சுமார் 11 மீட்டர் அதிக நீளம் கொண்டது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து அந்நிறுவனம் தெரிவிக்கையில், தயாரிக்க மொத்தம் 18 நாட்கள் ஆனதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்காக 30 கூலித்தொழிலாளர்கள் இரவு பகலாக கடுமையாக உழைத்து வந்தனர் . இந்த ஜீன்ஸில் உள்ள பட்டனின் எடை 3.6 டன்கள் ஆகும். அதாவது சுமார் 3600 கிலோ. இது தவிர, இது 7.8 மீட்டர் நீளமுள்ள ஜிப்பைக் கொண்டுள்ளது. இந்த zipper துருப்பிடிக்காத எஃகு மூலம் செய்யப்பட்டுள்ளது.
Readmore: யாராவது அகால மரணமடைந்து விட்டால், கவனமாக இருங்கள்!. ஆன்மாக்கள் துரத்துமாம்!. அறிவியல் உண்மை என்ன?