For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

உலகின் மிகப்பெரிய பனிப்பாறை நகரத் தொடங்கியது..!! பல நகரங்கள் மூழ்கும் அபாயம்..!! ஆய்வாளர்கள் எச்சரிக்கை..!!

11:40 AM Dec 15, 2023 IST | 1newsnationuser6
உலகின் மிகப்பெரிய பனிப்பாறை நகரத் தொடங்கியது     பல நகரங்கள் மூழ்கும் அபாயம்     ஆய்வாளர்கள் எச்சரிக்கை
Advertisement

உலகின் மிகப்பெரிய பனிப்பாறை திடீரென நகரத் தொடங்கியிருக்கும் நிலையில், இதற்கான காரணம் என்ன என்பதை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

இந்த பூமியின் இரண்டு துருவங்களிலும் பனிப்பாறைகள் இருப்பது அனைவருக்கும் தெரியும். பல நூறு ஆண்டுகளாக இந்த பனிப்பாறைகள் அங்கேயே தான் இருக்கிறது. ஆனால், கடந்த நூற்றாண்டு முதல் இதில் பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. ஏதோ ஒரு ஓரத்தில் இருக்கும் இந்த பனிப்பாறைகளில் நடக்கும் மாற்றங்கள் நம்மை எப்படிப் பாதிக்கும் என நீங்கள் யோசிக்கலாம். ஆனால் இந்த பனிப்பாறைகள் உருகினால், அது பூமியின் முக்கிய நகரங்களை மொத்தமாக அழிக்கும் அபாயம் உள்ளது.

உலகில் மிகப் பெரிய பனிப்பாறை A23a என்று அழைக்கப்படுகிறது. இது எவ்வளவு தடிமனானது என்பதை அதிநவீன சாட்டிலைட் இப்போது கணக்கிட்டுள்ளது. இந்த உறைந்த பனிப்பாறையின் மொத்த சராசரி தடிமன் 280 மீட்டர் ஆகும். இது இதன் நீளம் இல்லை, தடிமன். சுமார் 920 அடி தடிமன் என்றால் அது எவ்வளவு தடிமனாக இருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள். இந்த பனிப்பாறை 3,900 சதுர கிமீ பரப்பளவைக் கொண்டுள்ளது. மேலும், இதன் எடை சுமார் ஒரு டிரில்லியன் டன்னாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. மேலும், இது 64 கிமீ அலகம் கொண்டதாகும். அதாவது, அங்கே சென்று நீங்கள் எந்தப் பக்கம் பார்த்தாலும், இந்த பனிப்பாறையை மட்டுமே பார்க்க முடியும். அந்தளவுக்கு மிகப் பெரியது.

உலகின் மிகப் பெரிய பனிப்பாறையான இது, சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் லாக் ஆகி இருந்தது. 1986ஆம் ஆண்டு அண்டார்டிக் கடற்கரையில் இருந்து உடைந்த இந்த பனிப்பாறை வெட்டல் என்ற கடலில் லாக் ஆகி நின்றுள்ளது. பல ஆண்டுகள் ஒரே இடத்தில் இருந்த பனிப்பாறை இப்போது தான் மெல்ல நகரத் தொடங்கியுள்ளது. இது குறித்து ஆய்வாளர்கள் கூறுகையில், "இப்போது அந்த பனிப்பாறை நகரத் தொடங்கியுள்ளது. அதன் பயணத்தில் ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. அடுத்த சில நாட்களில் அது எங்கே எப்படிச் செல்கிறது என்பதை வைத்தே வரும் வாரங்களில் தெற்கு பெருங்கடலில் அதன் பாதை அமையும். இது பெரியது என்பது நமக்குத் தெரியும். ஆனால், எவ்வளவு பெரியது என்பதை ஐரோப்பிய விண்வெளி மையமான CryoSat-2 இப்போது கணக்கிட்டுள்ளது" என்றார்.

பனிப்பாறைகள் வெப்பமான கடல் நீரில் நகரத் தொடங்கினாலே அது மெல்லக் கரைந்து போகும். அது எவ்வளவு வேகமாகக் கரைகிறது. இதனால் கடலில் ஏற்படும் மாற்றங்கள் எப்படி இருக்கும் என்பது குறித்தும் ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். CryoSat என்ற சாட்டிலைட் மூலம் தான் பனிப்பாறைகளின் தடிமன் எவ்வளவு என்பதை அளக்க உதவுகிறது. கடந்த காலங்களிலும் பனிப்பாறைகள் குறித்து நாம் பல புதிய தகவல்களைத் தெரிந்து கொள்ள இந்த CryoSat சாட்டிலைட் முக்கிய காரணமாக இருந்துள்ளது.

பருவநிலை மாற்றம் என்பது மோசமான விஷயமாக மாறி இருக்கிறது. பருவநிலை மாற்றம் காரணமாகப் புவி வெப்பமடைந்து வரும் நிலையில், இதனால் பனிப்பாறைகள் படுவேகமாக கரைகிறது. இதனால் கடல்மட்டம் உயரும் நிலையில், சென்னை உட்பட கரையோரம் அமைந்துள்ள பல நகரங்கள் இதனால் மூழ்கும் அபாயம் இருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

Tags :
Advertisement