முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

உலக முதலீட்டாளர்கள் மாநாடு..!! மொத்தம் ரூ.6,64,180 கோடி முதலீடு..!! மாஸ் காட்டிய முக.ஸ்டாலின்..!!

06:03 PM Jan 08, 2024 IST | 1newsnationuser6
Advertisement

தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை பெருக்கவும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுக்கவும், சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, ஆஸ்திரேலியா உள்பட 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வர்த்தக மற்றும் தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். நேற்று காலை முதல் மாலை வரை நடைபெற்ற மாநாட்டில் முதல் நாளிலேயே ரூ.5.5 லட்சம் கோடி அளவுக்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

Advertisement

இன்று இரண்டாம் நாள் மாநாட்டில் பெரிய தொழில் அதிபர்கள் மட்டுமின்றி சிட்கோ, இண்டஸ்ரியல் எஸ்டேட் பகுதிகளில் தொழில் நடத்தும் குறு-சிறு தொழில் அதிபர்களும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள வருகை தந்தனர். முதலீட்டாளர்கள் மாநாடு நிறைவு விழா தொடக்கத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அமையவுள்ள காலணி தொழிற்சாலைக்கு முதலமைச்சர் முக.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பெரம்பலூரில் ரூ.150 கோடி மதிப்பில் அமையவுள்ள காலனி தொழிற்சாலையால் 150 பேருக்கு வேலை கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து பேசிய முதலமைச்சர் முக.ஸ்டாலின், ”உலகமே வியக்கும் வகையில் முதலீட்டாளர் மாநாடு நடத்தி இதயத்தில் இடம்பிடித்து விட்டார் அமைச்சர் டிஆர்பி ராஜா. உலக அரங்கில் முதலீட்டுக்கான சிறந்த மாநிலமாக தமிழ்நாடு உருவாகும். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம், தமிழ்நாட்டில் அடுத்த 20 ஆண்டுகளுக்கான வளர்ச்சிக்கு அடித்தளமிடப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் இறுதி செய்யப்பட்டுள்ள தொழில் முதலீடுகளுக்கான ஒப்பந்தங்கள் மூலம், முன் எப்போதும் இல்லாத வகையில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. மொத்தமாக, 6 லட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி ரூபாய் முதலீடாக ஈர்க்கப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டின் மூலம் தமிழ்நாட்டின் 20 ஆண்டுகால வளர்ச்சிக்கு அடித்தளம் போடப்பட்டுள்ளது. 27 தொழிற்சாலைகளை திறந்துவைத்துள்ளேன். 40 ஆலைகளுக்கு அடிக்கல் நாட்டியுள்ளேன். இதனை இந்தியாவே உற்றுநோக்கும் அவையில் பெருமகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன். இந்த திட்டங்கள் மூலம் நேரடி வேலை வாய்ப்பு என்ற வகையில் 14 லட்சத்து 54 ஆயிரத்து 712 நபர்களுக்கும், மறைமுகமாக 12 லட்சத்து 35 ஆயிரத்து 945 நபர்களுக்கும் என மொத்தமாக 26 லட்சத்து 90 ஆயிரத்து 657 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்” என தெரிவித்தார்.

Tags :
உலக நாடுகள்உலக முதலீட்டாளர்கள் மாநாடுதமிழ்நாடுதமிழ்நாடு அரசுமுதலமைச்சர் முக.ஸ்டாலின்
Advertisement
Next Article