புதிதாக தேர்வானவர்களுக்கு இம்மாதம் ரூ.1,000 கிடைக்குமா..? அட இவங்களுக்கு இப்படித்தான் பணம் போகுதா..?
தமிழ்நாட்டில் மொபைல் சிக்னல் கூட எடுக்காத சில கிராமங்களுக்கு முக்கியமான முறையை பயன்படுத்தி மகளிர் உரிமை தொகையை அரசு வழங்கி வருகிறது.
தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத்தொகை விரிவாக்கம் செய்யப்படுகிறது. அதாவது, மேலும் 1.40 லட்சம் பேருக்கு பணம் வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின்படி தமிழ்நாட்டில் உள்ள பெண்களுக்கு ரூ. 1000 ஏற்கனவே வழங்கப்பட்டு வருகிறது. தற்போது புதிதாக விண்ணப்பம் செய்யபவர்கள், ஏற்கனவே விண்ணப்பம் செய்து நிராகரிக்கப்பட்டவர்கள் இதில் இணையலாம்.
அதன்படி, மகளிர் உரிமைத்தொகை விரிவாக்கத்தில் புதிய பயனாளிகளுக்கு விண்ணப்பம் செய்ய இன்னும் 30 நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளது. இம்மாத இறுதிவரை அவர்களுக்கு விண்ணப்பங்களை மேற்கொள்ள வாய்ப்பு வழங்கப்படும். அவர்களுக்கு கணக்கில் எப்போது ரூ.1000 வரும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் மொபைல் சிக்னல் கூட எடுக்காத சில கிராமங்களுக்கு முக்கியமான முறையை பயன்படுத்தி தமிழ்நாடு அரசு மகளிர் உரிமை தொகையை வழங்கி வருகிறது.
நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சின்ன சின்ன கிராமங்களுக்கு கூட வழங்கப்பட்டு வருகிறது. அங்கே வங்கிக்கு பணம் கொடுக்காமல் மணி ஆர்டர் போல கூட்டுறவு வங்கி வழியாக பணம் வழங்கப்படுகிறது. கூட்டுறவு வங்கியில் இல்லையென்றால் கணக்கு தொடங்கி அங்கே பணம் வழங்கப்படுகிறது. பல இடங்களில் போன் சிக்னல் கூட இருக்காது. இதனால் பணத்தை கொடுப்பதில் சிக்கல் வரும். இதனால் கூட்டுறவு வங்கிகளை பயன்படுத்தி அதன் வழியாக பணம் வழங்க முடிவு செய்துள்ளது.
மகளிர் உரிமைத்தொகை விரிவாக்கத்தில் புதிய பயனாளிகளுக்கு கணக்கில் எப்போது ரூ.1000 வரும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, விரிவாக்கம் செய்யப்படும் விண்ணப்பங்கள் அடுத்த 2 வாரங்களில் ஏற்கப்படும். அவர்களின் பெயர்கள் இறுதி செய்யப்பட்டு ஜூலை 12ஆம் தேதிக்குள் புதிய பயனாளிகள் பெயர்கள் சேர்க்கப்படும். ஜூலை 14ஆம் தேதி 1 ரூபாய் அனுப்பி வங்கி கணக்கில் சோதனை செய்யப்படும். ஜூலை 15ஆம் தேதி கூடுதல் பயனாளிகள் சேர்க்கப்படுவார்கள். அதேபோல் ஆகஸ்ட் மாதமும் கூடுதல் பயனாளிகள் சேர்க்கப்படுவார்கள்.