உலக செஸ் சாம்பியன்ஷிப்!. சாம்பியன் பட்டத்தை நெருங்கிய தமிழக வீரர்!. 11வது சுற்றில் குகேஷ் வெற்றி!
World Chess Championship: உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் 11 ஆவது சுற்றில் நடப்பு சாம்பியனான டிங் லிரெனை வீழ்த்தி தமிழகத்தை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் குகேஷ் வெற்றி பெற்றார். இதன் மூலம் சாம்பியன் பட்டத்தை பெறும் வாய்ப்பு அவருக்கு அதிகமாக உள்ளது.
சிங்கப்பூரில் நடைபெற்று வரும் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் நடப்பு சாம்பியனான டிங் லிரெனை, இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ் எதிர்த்து விளையாடி வருகிறார். 14 சுற்றுகள் கொண்ட தொடரின் 11 ஆவது சுற்றில் வெள்ளை நிற காய்களுடன் குகேஷும், கறுப்பு நிற காய்களுடன் டிங் லிரெனும் விளையாடினர். தொடக்கம் முதல் இருவரும் சிறப்பாக விளையாடிய நிலையில், 29 ஆவது நகர்த்தலில் குகேஷ் வெற்றி பெற்றார். இதன் மூலம் 6க்கு 5 என்ற புள்ளிகளுடன் குகேஷ் முன்னிலை பெற்றுள்ளார்.
முன்னதாக முதல் சுற்றில் டிங் லிரெனும், 3 ஆவது சுற்றில் குகேஷும் வெற்றி பெற்ற நிலையில், மற்ற அனைத்து சுற்றுகளும் சமனில் முடிந்திருந்தன. அடுத்து வரும் 3 போட்டிகளில் சமனில் முடிந்தாலும் குகேஷ் சாம்பியன் பட்டத்தை வெல்வார். இளம் வயதில் பட்டம் வென்ற வீரர் என்ற பெருமையையும் பெறுவார்.
Readmore: நீரிழிவு நோயாளிகள், சிறுதானியங்கள் சாப்பிடலாமா?? கட்டாயம் தெரிந்துக் கொள்ளுங்கள்..