For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கனமழை எதிரொலி..!! 21 மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை..? முழு விவரம் உள்ளே..!!

A holiday has been declared for schools and colleges in Tiruvannamalai, Puducherry and Karaikal today (December 12) due to heavy rains.
08:24 AM Dec 12, 2024 IST | Chella
கனமழை எதிரொலி     21 மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை    முழு விவரம் உள்ளே
Advertisement

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், அரியலூர், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Advertisement

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் விழுப்புரம், திருப்பூர், மதுரை, தேனி, கடலூர், திருச்சி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களின் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக இன்று (டிசம்பர் 12) திருவண்ணாமலை, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சென்னை, விழுப்புரம், புதுக்கோட்டை, கரூர், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, ராமநாதபுரம், திண்டுக்கல், திருவாரூர், காஞ்சிபுரம், அரியலூர், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தூத்துக்குடி, நெல்லை, சேலம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வுகள் ஒத்திவைப்பு

* கனமழையால் விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் இன்று நடைபெறவிருந்த அரையாண்டுத் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 6 - 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று ஆங்கிலத் தேர்வு நடைபெற இருந்தது.

* அதேபோல், திருவள்ளுவர் பல்கலைக்கழக பருவத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாற்றுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : 150 அடி ஆழ்துளை கிணற்றில் சிக்கிக் கொண்ட சிறுவன்..!! இரவு, பகலாக இடைவிடாத போராட்டம்..!! 55 மணி நேரத்திற்கு பிறகு உயிருடன் மீட்பு..!!

Tags :
Advertisement