For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தூள்..! இவர்களும் ESI மற்றும் PF திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்...! முழு விவரம்

Workers whose orders are received and sold online can apply to benefit from the ESI and PF scheme.
07:27 AM Nov 10, 2024 IST | Vignesh
தூள்    இவர்களும் esi மற்றும் pf திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்     முழு விவரம்
Advertisement

ஆன்லைனில் ஆர்டர் பெறப்பட்டு விற்பனை செய்யப்படும் தொழிலாளர்கள் ESI மற்றும் PF திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் தொழிலாளர்கள் நல வாரியத்தில் இணையம் சார்ந்த தொழில்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் (GIG) (Delivery Boys) (ஆன்லைனில் ஆர்டர் பெறப்பட்டு விற்பனை செய்யப்படும்) மற்றும் வெளி மாநில கட்டுமானத் தொழிலாளர்கள் (ISM- Inter State Migrant Workers) மற்றும் வீட்டு வேலை செய்யும் பணியாளர்கள் (DOME Domestic Workers) மேற்படி தொழில்களில் பணிபுரியும் தொழிலாளர்களை அதிகளவில் பதிவு செய்வதற்கு ஏதுவாக தருமபுரி தொழிலாளர் உதவி ஆணையர் சமூக பாதுகாப்பு திட்டம் அலுவலகத்தில் வாரந்தோறும் வெள்ளிக் கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

Advertisement

இம்முகாமில் மேற்கண்ட தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு 19 வயது முதல் 59 வயது வரை உள்ளவர்கள் மட்டும் உறுப்பினர்களாக பதிவு செய்துக்கொள்ளலாம். மேலும், ESI/PF பிடித்தம் இல்லாதவர்களுக்கு மட்டுமே இத்திட்டத்தில் பயன்பெற தகுதியுடையவர்கள் ஆவார்கள்.

மேலும் விண்ணப்பிக்க வரும்போது வயதிற்கான ஆவணம், (குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, பள்ளி மதிப்பெண் சான்றிதழ், பிறப்பு சான்றிதழ் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று) ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம், புகைப்படம், நியமனதாரருக்கான ஏதேனும் ஒரு அடையாள அட்டை மற்றும் தொழிலாளர்கள் பணிபுரியும் அடையாள அட்டை ஆகிய அசல் ஆவணங்களுடன் அலுவலகத்திற்கு நேரில் வந்து சிறப்பு முகாமில் கலந்து கொண்டு தொழிலாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினர்களான பதிவு செய்து அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள் (கல்வி, திருமணம், மகப்பேறு, ஓய்வூதியம், இயற்கை மரணம், விபத்து மரணம்) பெற்று பயனடையலாம்.

Tags :
Advertisement