"விடுதியில் இருந்து வீட்டிற்க்கு வந்தது குத்தமா??" விடுதியில் இருந்து வீட்டிற்க்கு வந்த மனைவிக்கு கணவர் செய்த கொடூரம்..
விருத்தாசலம் அடுத்த, சாத்தியம் கிராமத்தைச் சேர்ந்தவர் 38 வயதான மணி. கட்டட தொழிலாளியான இவருக்கு, 36 வயதான சோனியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு 13 வயதான மகளும், 4 வயதான மகனும் உள்ளனர். இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக சோனியா திருப்பூரில் உள்ள தனியர் பனியன் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவர் அங்குள்ள விடுதியில் தங்கி பணியாற்றும் நிலையில், தீபாவளி பண்டிகை விடுமுறைக்காக அவர் தனது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, விடுதியில் தங்கி வேலை செய்யும் அவரது மனைவியின் நடத்தையில், மணிக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
மனைவியின் மீது ஏற்பட்ட சந்தேகத்தால், மணி சோனியாவிடம் அடிக்கடி தகராறு செய்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் மணி சோனியாவிடம் வழக்கம் போல் வாக்குவாதம் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மணி, கத்தியால் தனது மனைவி சோனியாவின் தலை மற்றும் இடது கையில் வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த சோனியாவை, அக்கம் பக்கத்தினர் மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சோனியாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், விருத்தாசலம் போலீசார் மணியை கைது செய்துள்ளனர்.
Read more: “என்னோட புருஷன் இருந்தா, நம்ம லவ் பண்ண முடியாது” ரயில் தண்டவாளத்தில் நடந்த கொடூர சம்பவம்..