இவ்வளவு சலுகைகளா? 'வீட்டில் இருந்தே வேலை!!' McAfee தரும் நல்ல சான்ஸ்! மிஸ் பண்ணிடாதீங்க!!
McAfee என்பது பல்வேறு தொழில்துறை சார்ந்த நிறுவனங்களுக்கு தேவையான Anti Virus உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை வழங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் தற்போது வேலைவாய்ப்பு குறித்த முக்கிய அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது.
McAfee நிறுவனத்தில் தற்போது சீனியர் டேட்டா சயின்டிஸ்ட் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு மாஸ்டர் டிகிரி அல்லது பிஎச்டி படிப்பை மெஷின் லர்னிங், ஸ்டேட்டிஸ்ட்டிக்ஸ், டே்டா சயின்ஸ் அல்லது அதற்கு தொடர்புடைய துறையில் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
பைத்தான், எஸ்க்யூஎல் மற்றும் MapReduce, Hadoop, Hive and Big Data technologies, Scikit - learn, Keras, Tensorflow, Pytorch உள்ளிட்டவற்றில் டே்டா இன்ஜினியரிங் தெரிந்திருக்க வேண்டும். எம்எல் டெக்னிக்ஸ் மற்றும் ப்ரேம் வொர்க்ஸ்களில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். 7 முதல் 9 ஆண்டு வரை மெஷின் லர்னிங், ரெக்கமென்டேஷன் சிஸ்டம்ஸ், பேட்டர்ன் ரெககனைஷன், டேட்டா மைனிங் அல்லது ஏஐ உள்ளிட்டவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டதில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் வீட்டில் இருந்தே பணி செய்ய அனுமதிக்கப்படுவார்கள். பென்ஷன் மற்றும் ஓய்வூதியத்துக்கான திட்டம், மெடிக்கல், டென்டல் மற்றும் கண்சார்ந்த பிரச்சனைகளுக்கு மருத்தவ உதவிகள் வழங்கப்படும். போனஸ் வழங்கப்படும். பெண்களுக்கு பிரசவ கால விடுப்பு உள்ளிட்ட சலுகைகளை வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பம் செய்ய விரும்புவோர் McAfee இணையதளம் சென்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து விண்ணப்பம் செய்யலாம். தற்போதைய அறிவிப்பில் மாதசம்பளம் பற்றிய விபரம் தெரிவிக்கப்படவில்லை. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி என்பது குறிப்பிடப்படவில்லை. இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் முடிந்தவரை முன்கூட்டியே விண்ணப்பம் செய்வது சிறந்ததாகும். விண்ணப்பம் செய்ய விரும்புவோர் McAfee இணையதளம் சென்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து விண்ணப்பம் செய்யலாம்.
Read more ; அதிர்ச்சி!. ஒரே IMEI எண்ணுடன் 1.5 லட்சம் போலி ஃபோன்கள் கண்டுபிடிப்பு!.