வெள்ளிக்கிழமையில் பெண்கள் கட்டாயமாக இதை செய்யக்கூடாது.! ஏன் தெரியுமா.!?
பொதுவாக வாரத்தில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகள் தெய்வீகமான நாட்களாக கருதப்பட்டு வருகிறது. குறிப்பாக வெள்ளிக்கிழமை தான் பல நல்ல விஷயங்களை செய்வதற்கு உகந்த நாளாக ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. வாரத்தின் 6 நாட்களும் வீட்டில் பூஜை செய்யாமல் இருந்தாலும் வெள்ளிக்கிழமை கண்டிப்பாக பூஜை செய்ய வேண்டும். இது வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். ஆனால் வெள்ளிக்கிழமையில் ஒரு சில செயல்களை செய்வதன் மூலம் வீட்டில் துர்திஷ்டம் ஏற்படும். அவை என்னென்ன என்பதை குறித்து பார்க்கலாம்?
1. வெள்ளிக்கிழமை அன்று ஒருவருக்கு பணத்தினை கடனாக கொடுக்க கூடாது. அதையும் மீறி கொடுக்க வேண்டிய நிலை இருந்தால் வாசற்படியில் வைத்தோ, அல்லது வாசற்படியில் நின்று கொண்டோ குடுக்க கூடாது. வீட்டினுள் சென்று தான் கொடுக்க வேண்டும்.
2. பூஜை செய்த பின்பு குத்துவிளக்கை தானாக அனையவிட கூடாது. இது வீட்டுக்கு நல்லதல்ல.
3. வெள்ளி கிழமையன்று வீட்டை துடைப்பது, பூஜை அறையை சுத்தம் செய்வது கண்டிப்பாக கூடாது. இது வீட்டில் உள்ள மகாலட்சுமியை வெளியே அனுப்புவதற்கு சமமாகும்.
4. குளித்துவிட்டு ஈர்த்தலையுடனும், ஈர்த்துணியுடனும் பூஜை செய்ய கூடாது.
5. வெள்ளி கிழமையன்று கோயிலுக்கு சென்றால் வீட்டில் விளக்கேற்றி பூஜை செய்து விட்டு தான் கோயிலுக்கு செல்ல வேண்டும்.
6. கோயிலில் இருந்து வாங்கி வந்த திருநீர், குங்குமம் போன்ற பிரசாதங்கள் வெள்ளி கிழமையன்று தவறியும் கூட கீழே கொட்டாமல் பார்த்து கொள்ளவும்.
7. வீட்டில் உபயோகிக்கும் எண்ணெய் போன்ற பொருட்களை விளக்கு வைக்கும் நேரத்தில் பிறருக்கு கொடுக்கக் கூடாது. மேலே குறிப்பிட்ட செயல்களை வெள்ளிக்கிழமையன்று செய்யும்போது வீட்டில் நோய் நொடி ஏற்படும், செல்வ வளங்கள் குறையும்.