மகளிர் உரிமைத்தொகை..!! தகுதியானவர்கள் பயனடைய மீண்டும் ஒரு வாய்ப்பு..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!
05:30 PM Nov 20, 2023 IST | 1newsnationuser6
Advertisement
குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலம் மாதம் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மாதம் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன் பிறகு இந்த மாதம் மேல்முறையீடு செய்த 7.53 லட்சம் பேருக்கு 2ஆம் கட்டமாக ரூ.1,000 வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.
Advertisement
இந்நிலையில், 2024ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் வரவுள்ள நிலையில், இந்த திட்டத்தில் சில தளர்வுகள் வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு சில வாரங்களுக்கு முன்னதாக இந்த திட்டத்தில் பயனாளர்களின் தகுதிகளில் சில தளர்வுகளை அறிவித்தது. மேலும், அதிக பயனாளர்களை இணைக்க அரசு திட்டமிட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் தகுதியுடைய பெரும்பான்மையான மக்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.