For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

உல்லாசத்துக்கும், பணத்துக்கும் தான் காதல்; பல பெண்களை காதலித்து, வாலிபர் செய்த மோசடி!!!

women was fooled by a young boy
05:59 PM Dec 23, 2024 IST | Saranya
உல்லாசத்துக்கும்  பணத்துக்கும் தான் காதல்  பல பெண்களை காதலித்து  வாலிபர் செய்த மோசடி
Advertisement

மயிலாடுதுறை மாவட்டம், திருவாவடுதுறை பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் 23 வயதான ஜாகிர் ஹூசைன். சென்னையில் வேலை செய்து வரும் மயிலாடுதுறையை சேர்ந்த 29 வயதான இளம் பெண் ஒருவருக்கும் ஜாகிர் ஹூசைனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதையடுத்து, ஜாகிர் ஹூசைன் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளை கூறி, அவரிடமிருந்து 14 பவுன் நகைகள் மற்றும் ரூ.2 லட்சம் ரொக்கத்தை பறித்துள்ளார்.

Advertisement

அந்த இளம்பெண்ணும் திருமணம் செய்ய போகிறோம் என்ற நம்பிக்கையில் நகை மற்றும் பணத்தை கொடுத்துள்ளார். பின்னர் ஜாகிர் ஹூசைன், அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்ததோடு, அதை தனது செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார். இதையடுத்து, தனக்கு தோன்றும் போதெல்லாம் அவரது காதலியை உடலுறவுக்கு அழைத்துள்ளார். ஆனால் இதற்கு அவரது காதலி மறுப்பு தெரிவித்தால், உடனே அவரிடம் இருக்கும் ஆபாச வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்பி விடுவேன் என மிரட்டி, பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் அந்தப் பெண் கர்ப்பமடைந்தார்.

இது குறித்து இளம்பெண் தனது காதலனிடம் கூறியுள்ளார். இதையடுத்து, ஜாஹூர் உசேன் மற்றும் அவரது குடும்பத்தினர், இளம்பெண்ணை வீட்டிற்கு அழைத்து கட்டாய கருக்கலைப்பு செய்துள்ளனர். இதனால் இளம்பெண்ணின் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர் இது குறித்து மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், இளம்பெண்ணை குற்றம்சாட்டி பேசியதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் இளம்பெண்ணுக்கு ஆதரவாக மகளிர் காவல் நிலையம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, ஜாகிர் ஹூசைன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும், ஜாகிர்ஹூசைனால் ஏமாற்றப்பட்ட 10க்கும் அதிகமான பெண்கள் புகார் அளித்து வருவதாக கூறப்படுகிறது. விசாரணையில், ஜாகீர் ஹூசைன் திருமணமான பெண்களையும் ஏமாற்றி உல்லாசமாக இருந்துவிட்டு அந்த ஆபாச வீடியோவை வெளியிடுவதாக மிரட்டி பணம், நகைகளை பறித்து வந்தது தெரியவந்துள்ளது.

Read more: உங்க செல்போன் பேட்டரி பழுதாகாமல் இருக்க, இத்தனை சதவீதம் தான் சார்ஜ் செய்ய வேண்டும்…

Tags :
Advertisement