13 வயது மகளை கர்ப்பமாக்கிய தந்தை; விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்..
கிருஷ்ணகிரி மாவட்டம், பச்சபனட்டி கிராமத்தில் 27 வயதான நபர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் செங்கல் சூலையில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், இவருக்கும் கணவரை இழந்த பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். அந்த பெண்ணிற்கு, 3 பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.
இவர் தனது மனைவியின் நான்கு குழந்தைகளையும் தன் சொந்த குழந்தைகள் போல் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, அந்த பெண்ணின் 13 வயது மகளுக்கு திடீரென உடல் நல குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்துள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஆம், சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், 13 வயது சிறுமி கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த தாய், இது குறித்து தனது மகளிடம் விசாரித்துள்ளார். அப்போது சிறுமி, தனது வளர்ப்பு தந்தை தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளார். இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்த தாய், சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் கூலி தொழிலாளியை கைது செய்தனர்.
Read more: உல்லாசத்துக்கும், பணத்துக்கும் தான் காதல்; பல பெண்களை காதலித்து, வாலிபர் செய்த மோசடி!!!