”கருப்பு சிவப்பு நரிகளிடமிருந்து பெண்களை பாதுகாக்க வேண்டும்”..!! ”இதுதான் பாஜகவின் முழக்கம்”..!! கோவையில் பரபரப்பை ஏற்படுத்திய போஸ்டர்கள்..!!
சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் தனது காதலனுடன் பேசிக் கொண்டிருந்த மாணவி, பிரியாணி கடை நடத்தி வரும் ஞானசேகரன் என்பவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதையடுத்து, மாணவி அளித்த புகாரின் பேரில் ஞானசேகரனை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும், இந்த சம்பவத்தை கண்டித்து மாநிலம் முழுவதும் அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றன. இந்த விவகாரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தன்னைத் தானே 8 முறை சாட்டையால் அடித்துக் கொண்டார். இது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
இந்நிலையில், கோவை மாநகரில் பாஜக சார்பில் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில், “பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் துணை நிற்பதே பாஜகவின் பழக்கம். கருப்பு சிவப்பு நரிகளிடமிருந்து பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வதே எங்கள் முழக்கம்!” என்ற வாசகங்களுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதில் அண்ணா பல்கலைக்கழகத்தின் புகைப்படம், பிரதமர் மோடி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளது.
Read More : கணவன் மீது பெட்ரோலை ஊற்றி தீவைத்து கொளுத்திய மனைவி..!! மேயர் குடும்பத்தில் நடந்த பயங்கரம்..!!