கண்ணீர் துளிளுடன் பெருமிதம்: "700 பிணங்கள் போஸ்ட்மார்ட்டம் செய்த சிங்க பெண்.." ராமர் கோவில் விழாவில் சிறப்பு அழைப்பாளர்,!
ஜனவரி 22 ஆம் தேதி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா உத்திரபிரதேசம் மாநில அயோத்தி நகரில் நடைபெற இருக்கிறது. இந்த விழாவிற்கு நாடெங்கிலும் இருந்து ஏராளமான சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். அரசியல்வாதிகள் சினிமா துறை பிரபலங்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் தவிர ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள் பாபர் மசூதி இடிப்பின் போது கர சேவையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் ராமர் கோவில் நிலம் மீட்பு தொடர்பான வழக்கில் வாதாடிய வக்கீல்கள் ஆகியோருக்கும் சிறப்பு அழைப்பாளர்களுக்கான அழைப்பிதழ் வழங்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த பிரேத பரிசோதனை செய்யும் பெண் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருக்கும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கான அழைப்பிதழை கண்ட அந்த பெண் ஆனந்தக் கண்ணீர் வடித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்தவர் சந்தோஷி துர்கா. 35 வயதான இந்த பெண் சத்தீஸ்கர் மாநிலத்தின் ஆரம்ப சுகாதார நிலையத்தில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார்.
18 வருடங்களாக பணியாற்றி வரும் இந்த சிங்கப்பெண் 700 சடலங்களுக்கு மேல் பிரேத பரிசோதனை செய்து இருக்கிறார். துப்புரவு பணியாளராக பணியாற்றுவதோடு பிரேத பரிசோதனை உதவியாளராகவும் பணியாற்றி வருகிறார். இவரது சேவையை பாராட்டி கௌரவிக்கும் வகையில் ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் நெகிழ்ச்சியுடன் பேசியவர் " அயோத்தி நகருக்கு நான் அழைக்கப்படுவேன் என்று என் கனவில் கூட நினைக்கவில்லை. ஆனால் ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கே எனக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த அழைப்பிதழை பார்த்ததும் எனது கண்கள் ஆனந்தக் கண்ணீர் வடித்தன" என தெரிவித்துள்ளார்.
சந்தோசி துர்கா இராமர் கோவில் விழாவிற்கு அழைக்கப்பட்டதற்கு சத்தீஸ்கர் மாநிலத்தின் நர்கர்பூர் கிராமத்தின் மருத்துவ அதிகாரியும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். சந்தோஷி துர்காவின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பை பாராட்டும் வகையில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு அழைக்கப்பட்டு கௌரவப்படுத்தப்பட்டு இருக்கிறார் என தெரிவித்திருக்கிறார்.