"பெரிய பசங்க இருக்கும் போது, எப்படி உன்கூட உல்லாசமா இருக்க முடியும்?" கள்ளக்காதலனின் ஆசையை நிறைவேற்றாததால் தாய்க்கு நேர்ந்த சோகம்..
தென்காசி மாவட்டம், சிவகிரி, அம்பேத்கர் தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் ராமேஸ்வரன். இவருக்கு 39 வயதான பாஞ்சாலி என்ற மனைவி உள்ளார். சிவகிரி மெயின் ரோட்டில் உள்ள கடை ஒன்றுக்கு, பாஞ்சாலி நேற்றிரவு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த நபர் ஒருவர், பாஞ்சாலியிடம் தகராறு செய்து விட்டு அவரை கத்தியால் குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த பாஞ்சாலி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்து தகவல் அறிந்த சிவகிரி போலீசார், வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், வாசுதேவ நல்லூரை சேர்ந்த 44 வயதான சமுத்திரவேல் பாஞ்சாலியை கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் கூறும்போது, கணவரை விட்டு பிரிந்து வாழும் பாஞ்சாலிக்கும் தனக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாகவும், தன்னுடன் உல்லாசமாக இருக்க பாஞ்சாலியை வற்புறுத்தியதாக கூறியுள்ளார். ஆனால் பாஞ்சாலியோ, தனது மகன்கள் பெரியவர்களாகி விட்டதால் அவருடன் உல்லாசமாக இருக்க மறுத்துள்ளார்.
இதனால் தான் பாஞ்சாலியை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து கைது செய்யப்பட்ட சமுத்திரவேலை சிவகிரி கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி, பாளை மத்திய சிறையில் அடைத்தனர்.
Read more: நெஞ்சை ரணமாக்கும் கொடூர சம்பவம்.. பள்ளி வாசலில் நின்ற சிறுமிக்கு நேர்ந்த சோகம்..