பேருந்து நிலையத்தில் யாசகம் பெற்ற 80 வயது மூதாட்டி; தனியாக அழைத்துச் சென்று வாலிபர் செய்த கொடூரம்..
தேன்கனிக்கோட்டை தாலுகா, கெலமங்கலத்தில் 80 வயது மூதாட்டி ஒருவர் வசித்து வருகிறார். இவர், ஓசூர் பேருந்து நிலையத்தில் யாசகம் பெற்று பிழைப்பு நடத்தி வருகிறார். இந்நிலையில், சம்பவத்தன்று மூதாட்டி வழக்கம் போல், பஸ் நிலையத்தில் யாசகம் பெற்று வந்துள்ளார். அப்போது அங்கு வந்த 35 வயது வாலிபர் ஒருவர், தான் கெலமங்கலம் செல்வதால் உங்களை டூவீலரில் அழைத்து சென்று விடுகிறேன் என்று கூறியுள்ளார். இதனை நம்பிய மூதாட்டியும், வாலிபருடன் சென்றுள்ளார். செல்லும் வழியில், பேரண்டப்பள்ளி வனப்பகுதி அருகே வந்த உடன், அவர் மூதாட்டியை தனியாக இழுத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் மூதாட்டி அலறி துடித்துள்ளார். இதனால் பதறிப்போன வாலிபர், அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
மூதாட்டியின் அழுகுரல் கேட்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், மூதாட்டியை மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும், சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, ஓசூர் டவுன் அனைத்து மகளிர் போலீசார், சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில், மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்தது, ஓசூர் தாலுகா பாகலூர் அருகே உளியாளத்தை சேர்ந்த 35 வயதான லட்சுமணன் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரித்ததில், அவர் போதையில் மூதாட்டியை பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளார். இதனிடையே, தப்பித்து ஓட முயன்ற லட்சுமணன், கீழே விழுந்ததில் அவரது வலது காலில் முறிவு ஏற்பட்டது.
Read more: உடலுறவுக்கு மறுத்த மனைவி; 13 வயது மகளை உல்லாசத்திற்கு அழைத்த கொடூர தந்தை..