"வாழ்ந்தா, அண்ணி கூட மட்டும் தான் வாழுவேன்" அடம்பிடித்த இளம் பெண்; ஆத்திரத்தில் உறவினர்கள் செய்த காரியம்..
உத்திரபிரதேசம் மாநிலம், உன்னாவ் மாவட்டம், பெஹாடா முஜாவர் கிராமத்தை சேர்ந்தவர் ரோகினி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் தனது கணவருடன் வசித்து வருகிறார். இந்நிலையில், இவரது கணவனின் தங்கை முறை கொண்ட இளம்பெண்ணும் அதே கிராமத்தில் வசித்து வருகிறார். ரோஹினியும், இளம்பெண்ணும் நெருக்கமாக பழகி வந்த நிலையில், இவர்களின் பழக்கம் காதலாக மாறியுள்ளது. இருவரும் ஒரேபாலின ஈர்ப்பு காதல் வயப்பட்டு இருநத்தை அறிந்த குடும்பத்தினர், பழக்கத்தை கைவிடும்படி கண்டித்துள்ளனர்.
தங்களின் காதலை கைவிட முடியாமல் தவித்த காதல் ஜோடி, கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியேறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், இருவரையும் தேடி கண்டுப்பிடித்து மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். அப்போது, இளம்பெண், வாழ்ந்தால் அண்ணியுடன் தான் வாழுவேன் என அடம்பிடித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ரோஹினியின் குடும்பத்தினர், இளம்பெண்ணுக்கு விஷம் கொடுத்த கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பாதிக்கப்பட்ட இளம்பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Read more: பிச்சைக்காரர் மீது ஏற்பட்ட காதல்; 6 பிள்ளைகளை விட்டுச் சென்ற தாய்; இறுதியில் நடந்த ட்விஸ்ட்..