"எனக்கே ஒன்னும் இல்லைங்க" திருடனிடம் புலம்பிய பெண்; பதிலுக்கு திருடன் என்ன கொடுத்தான் தெரியுமா?
மகாராஷ்டிரா மாநிலம், மும்பை அருகே உள்ள மலாடு பகுதியில் 38 வயது பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்வு, வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனை நோட்டமிட்ட திருடன், அவரது வீட்டிற்குள் நுழைந்துள்ளான். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் கத்தியுள்ளார். அப்போது அந்த திருடன், கதவை உள்பக்கமாக தாளிட்டு, வீட்டில் உள்ள நகைகளை கொடுக்குமாறு மிரட்டி உள்ளார். இதையடுத்து, அந்த பெண் எனக்கே இங்கு எதுவும் இல்லை, இதில் உனக்கு எதை கொடுப்பது என்று திருட வந்த திருடனிடம் புலம்பியுள்ளார்.
பெண்ணின் புலம்பலை கேட்ட திருடன், எதிர்பாராத விதமாக அந்த பெண்ணுக்கு முத்தமிட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், வழக்கு பதிவு செய்து திருடனை கைது செய்தனர். இந்நிலையில், திருட வந்த இடத்தில் நகை, பணம் என்று எதுவும் இல்லாததால், தன்னிடம் புலம்பிய பெண்ணிற்கு முத்தம் இட்டுச் சென்ற சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது.