பிச்சைக்காரர் மீது ஏற்பட்ட காதல்; 6 பிள்ளைகளை விட்டுச் சென்ற தாய்; இறுதியில் நடந்த ட்விஸ்ட்..
உத்தரபிரதேச மாநிலம், ஹர்தோய் மாவட்டம் ஹர்பால்பூர் பகுதியைச் சேர்ந்தவர் 45 வயதான ராஜு. இவருக்கு 36 வயதான ராஜேஸ்வரி என்ற மனைவியும், 6 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், கடந்த 3-ம் தேதி காய்கறிகள் வாங்க வீட்டை விட்டு சென்ற ராஜேஸ்வரி, வீட்டிற்க்கு திரும்பி வரவில்லை. இதனிடையே, எருமை மாட்டை விற்று வீட்டில் வைத்திருந்த காசையும் காணவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ராஜு, சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது, "45 வயதான நான்ஹே பண்டிட் என்ற பிச்சைக்காரர், இவர்களின் வீட்டிற்க்கு அடிக்கடி பிச்சை எடுக்க வந்துள்ளார். அப்போது அவருக்கும் ராஜேஸ்வரிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இருவரும் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். இதனால் தனது மனிவியை அந்த பிச்சைக்கரர் நான்ஹே பண்டிட் அழைத்து சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார்.
சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், மாயமான ராஜேஸ்வரியை தீவிரமாக தேடி வந்தனர். இறுதியில், மாயமான ராஜேஸ்வரியை கண்டுபிடித்த போலீசார், அவரை ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், பிச்சைக்காரர் நான்ஹே பண்டிட், அவரை கடத்தி சென்றதாக கூறியுள்ளார். மேலும், ராஜேஸ்வரியுடன் தொடர்பில் இருந்த பிச்சைக்காரர் நான்ஹே பண்டிட் தலைமறைவாக உள்ள நிலையில், போலீசார் அவரி தீவிரமாக தேடி வருகின்றனர்.
Read more: வீட்டு வேலைக்கு வந்த 23 வயது இளம்பெண்; ஆசையை அடக்க முடியாமல் 78 முதியவர் செய்த காரியம்..