முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

சூது கவ்வும்.! கணவனை ஏமாற்றிய பெண்.! கள்ளக்காதலன் கழுத்தை அறுத்துக் கொலை.!

12:50 PM Feb 13, 2024 IST | 1newsnationuser4
Advertisement

கணவனை ஏமாற்றி விட்டு கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்து வந்த பெண்ணை, கள்ள காதலன் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Advertisement

கர்நாடக மாநிலத்தில் உள்ள சிக்கபல்லாப்பூர் டவுனை சேர்ந்த சாம்ராஜ் பேட்டையில் தீபா (40) என்பவர் தனது கணவர் மற்றும் 2 மகன்களுடன் வசித்து வந்தார். வீட்டின் அருகில் உள்ள பேக்கரிக்கு தீபா அடிக்கடி சென்று வந்த நிலையில், அங்கு வேலை செய்த திவாகர்(37) என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் திருமணம் கடந்த உறவில் ஈடுபட்டனர்.

திவாகர் தனியாக வீடு எடுத்து தங்கி வரும் நிலையில், தீபா அவரது வீட்டிற்கு அடிக்கடி சென்று உல்லாசமாக இருந்திருக்கிறார். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தீபா தனது வீட்டில் இருந்து மாயமானார். அவரது கணவர் அருகில் இருந்த காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து, காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வந்தனர்.

இதற்கிடையில் திவாகர் வசித்த வாடகை வீட்டில் துர்நாற்றம் வீசியதாக அக்கம் பக்கத்தினர் புகார் அளித்துள்ளனர். வெளிப்பக்கமாக பூட்டப்பட்டிருந்த அந்த வீட்டின் கதவை உடைத்து போலீசார் உள்ளே நுழைந்த போது, அங்கு உள்ள சமையல் அறையில், தீபாவின் சடலத்தை அழுகிய நிலையில் கண்டனர்.

திவாகர், தீபாவின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு அந்த இடத்தை விட்டு தப்பியோடி இருக்கிறார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் திவாகரை தேடி வருகின்றனர். அவர் கிடைத்த பின்பே இந்த கொலைக்கான காரணம் தெரியவரும் என்று காவல்துறையின் தெரிவித்தனர்.

Tags :
affairhusbandIllicit RelationshipKarnatakalovermurderpolice investigationwife
Advertisement
Next Article