54 வயதில், கள்ளக்காதலனுடன் உல்லாசம்... குளிக்க சென்ற பெண்ணிற்கு காத்திருந்த அதிர்ச்சி..
சென்னை மாவட்டம், திருவிக நகரில் 54 வயது பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கும், அவரது கணவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துள்ளனர். இதனால் தனது தாயுடன் வசித்து வந்துள்ளார். தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வேலை செய்து வரும் இவர்,சமூக வலைத்தளங்களில் அதிக நேரம் செலவழித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு முகநூல் மூலமாக சிவா என்ற நபர் ஒருவர், அந்த பெண்ணிற்கு அறிமுகமாகியுள்ளார். இதையடுத்து, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, சிவா அந்த பெண்ணிடம் "எனக்கு உன்ன நேர்ல பாக்கணும் போல இருக்கு" என்று கூறியுள்ளார். இதையடுத்து, சிவாவை அந்த பெண் தனது வீட்டிற்க்கு அழைத்துள்ளார். பின்னர், அங்கு இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர்.
அதன் பிறகு அந்தப் பெண் குளிப்பதற்காக தான் அணிந்திருந்த நகைகளை கழற்றி மேஜையில் வைத்து விட்டு சென்றார். குளித்து விட்டு திரும்பி வந்து பார்த்த போது செயின், மோதிரம், வளையல் என எட்டு பவுன் தங்க நகைகள் காணாமல் போயுள்ளது. அதே சமையம், ஹாலில் அமர்ந்திருந்த சிவாவையும் காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெண், சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்த போலீசார் சிவாவின் ஃபேஸ்புக் கணக்குகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.