சீறி வரும் தண்ணீர்..! எண்ணூர், மணலி மக்களே அலர்ட்..!
தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் சென்னையின் குடிநீர் ஆதாரமான பூண்டி ஏரியில் இருந்து 1,000 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.
சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் சென்னையின் குடிநீர் ஆதாரமான பூண்டி ஏரியில் 3,500 கன அடி நீர்வரத்து உள்ள நிலையில் 1,000 கன அடி உபரி நீர் தற்போது திறந்து விடப்பட்டுள்ளது. பூண்டி ஏரியில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளதால் கொசஸ்தலை ஆற்றின் காரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. பூண்டி ஏரி திறப்பதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு வெள்ள அபாய எச்சரிக்கை குறுஞ்செய்தி கொசஸ்தலை ஆற்றின் காரையோர மக்களுக்கு அனுப்பப்பட்டிருந்தது.
பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவான 35 அடியில் நீர்மட்டம் 34.5 அடியை எட்டியதால், ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. பூண்டி ஏரியில் இருந்து 1,000 கன அடி நீர் வெளியேறி வருவதால், நம்பாக்கம், கிருஷ்ணாபுரம், தாமரைப்பாக்கம், மெய்யுர், புதுகுப்பம், ஆத்தூர், பண்டிகாவனூர், சீமவாரம், நாப்பாளையம், இடையன்சாவடி, மணலி, மணலி புதுநகர், சடையன்குப்பம், எண்ணூர் உள்ளிட்ட கொசஸ்தலை ஆற்றின் இருபுறமும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Read More: அதிகனமழை எச்சரிக்கை.. தென்காசி மாவட்ட பள்ளிகளுக்கு அரை நாள் விடுமுறை..!! – மாவட்ட ஆட்சியர்