மகளிடம் அத்துமீறிய கணவன்; தட்டிக்கேட்ட மனைவிக்கு நேர்ந்த கொடூரம்...
செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் பகுதியை சேர்ந்தவர் 45 வயதான மோகனவேல். எம்சிஏ பட்டதாரியான இவருக்கு, தகுந்த வேலை கிடைக்கவில்லை, இதனால் அவர் அவ்வப்பொழுது டெய்லராக பணியாற்றி வருகிறார். இவரது தந்தை பிஎஸ்என்எல் ஓய்வு பெற்ற ஊழியர் என்பதால் அவர் மாதம் ஓய்வூதியம் பெற்று வருகிறார். இந்நிலையில், கடந்த 2014 ஆம் ஆண்டு, மோகனவேலுக்கும் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த புவனேஸ்வரி (36) என்பவருக்கும் திருமணம் முடிந்துள்ளது. இந்த தம்பதி வண்டலூர் பகுதியில் வாழ்ந்து வந்த நிலையில், இவர்களுக்கு 10 வயதான பெண் குழந்தை ஒன்று உள்ளது. தனது தந்தையின் பென்ஷன் பணத்தை வைத்து குடும்பம் நடத்தி வந்த நிலையில், குடும்பத்தில் பண தேவை வரும் போது கணவன் மனைவி இடையே சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், கடந்த ஓரு வருடத்திற்கு முன்பு, இந்த தம்பதி காஞ்சிபுரம், மடம் தெரு அருகே உள்ள ஆனந்த ஜோதி பண்டிதர் தெருவிற்கு குடிபெயர்ந்து உள்ளனர். இந்நிலையில், மோகனவேல் மனைவி புவனேஸ்வரி, ஏகாம்பரநாதர் சன்னதி தெருவில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், வீட்டில் மனைவியும், தந்தையும் மாத ஊதியம் பெற்று வரும் நிலையில் மோகனவேல் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருப்பதால், ஏற்றத்தாழ்வு ஏற்பட்டு அவ்வப்போது கணவன் மனைவி இடையே தகறாரு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சளுக்கு ஆளான மோகனவேல், மனநிலைக்கு மருந்து எடுத்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று மாலை வழக்கம் போல் மனைவி புவனேஸ்வரி, பணி முடித்து வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது புவனேஸ்வரி மற்றும் மகளிடம் மோகனவேல் சண்டையிட்டுள்ளார். மேலும், அவர் தனது தந்தை மற்றும் மகளிடம் அத்துமீற முயன்றுள்ளார். அப்போது புவனேஸ்வரி அதனை தடுக்க முயற்சி செய்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மோகனவேல், கத்திரிக்கோலால் மனைவியை சரமரியாக குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் புவனேஸ்வரி சரிந்து விழுந்துள்ளார். சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். அங்கு மனைவியின் சடலம் அருகே அமர்ந்து இருந்த மோகனவேலை கைது செய்த போலீசார், புவனேஸ்வரியின் உடலை மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு உடல்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.