”இப்போது தேர்தல் வைத்தாலும் எடப்பாடியார் CM ஆவார்”..!! ”அவர் பேச்சில் சட்டப்பேரவையே ஆடிப்போய்விட்டது”..!! மாஜி அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்..!!
இப்போது தேர்தல் வைத்தாலும் எடப்பாடி பழனிசாமி முதல்வராவார் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
சேலம் மாநகர மாவட்ட அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், "நாளைய தினமே சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றாலும் மக்கள் ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராவார். அதற்கு மக்கள் தயாராக உள்ளனர். கோரிக்கைகள் வைத்தால், காது கொடுத்து கேட்டு அதற்கு நடவடிக்கை எடுக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அவர் எளிமையான முதல்வராகவும் மக்களால் கொண்டாடப்பட்டார்.
மின்சார கட்டணம் உயர்வு, வீட்டு வரி உயர்வு உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு வேண்டும் என்றால், 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி கோட்டைக்கு செல்ல வேண்டும். எடப்பாடி பழனிசாமி தேர்தல் வியூகத்தை வகுத்து வருகிறார். இதற்காக நிர்வாகிகளை அடிக்கடி சந்தித்து வருகிறார். இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டும் என்று நாட்டு மக்களை சந்திக்கும் போதெல்லாம் வாக்கு சேகரிக்க வேண்டும்.
இதுதான் தேர்தல் வியூகம். நமக்கு நம்முடைய வாக்குகள் மட்டுமல்ல, நியாயமான அனைத்து வாக்குகளையும் உறுதி செய்ய வேண்டும். சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி பேசிய பேச்சில் சட்டப்பேரவையே ஆடிப் போய்விட்டது. முதல்வர், துணை முதல்வர் என எத்தனை பேர் எழுந்து நின்று பேசியும் வேலைக்கு ஆகவில்லை. திமுகவை நெஞ்சில் இறுக்கத்துடன் எதிர்க்கின்ற ஒரே தலைவர் எடப்பாடி பழனிசாமி. திமுகவின் முகத்திரையை கிழித்து காண்பிக்கின்ற ஒரே தலைவர் எடப்பாடி பழனிசாமி தான்" என பேசினார்.
Read More : ரிசர்வ் வங்கியில் புதிய மாற்றமா..? ஆளுநராக பொறுப்பேற்றுக் கொண்ட சஞ்சய் மல்ஹோத்ரா பேட்டி..!!